search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wine bottles"

    • பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது49) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான புதுவை சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு எடுத்து சென்றனர்
    • கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற சரவணன் (23). இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து 23 அட்டை பெட்டிகளில் காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கந்திலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்று காலை கந்திலி போலீசார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரு வில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராம்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் ரெயில்வே டி.எஸ்.பி பெரியசாமி மற்றும் ேபாலீ சார் ரோந்து சென்றனர். அப்போது பிளாட்பார்ம் 4-ல் ஐ லேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பேக்கு டன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் கிழக்கு தெருவை சேர்ந்தத ராம்குமார் 19 என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கையில் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்த போது அதில் 48 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை மடக்கி பிடித்த போலீசார் மது பாட்டில்களும் பறி முதல் செய்து போலீஸ் நிலையத்த்தில் ஒப்படைத்த னர். இதன் மதிப்பு 3 ஆயி ரத்து 840 ஆகும் . தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    • போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காயச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற் பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 எண்களில் தெரிவிக்கலாம்.

    தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 441 மது பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    வேலூர்:

    வேலூரில் நேற்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் பார்களில் மது விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தடையை மீறி மாவட்டம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தினர்.

    தடையை மீறி மது விற்பனை செய்யப்பட்டதாக 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 441 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒரு சில இளைஞர்களின் தவறான செயல்களால் இப்பாதையில் மது பாட்டில்களும், மாட்டு சாணங்களும் கிடக்கின்றது. தினமும்் இரவு சிலர்் மது குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி சொல்கின்றனர்.

    இதனால் நடைபயிற்சிக்காக தினமும் வரும் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.

    மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டிலகள் கடத்தப்பட்டது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர்கள் காரில் சோதனை நடத்தினர். அந்த காரில் 192 மது பாட்டில்களும், 44 பீர் பாட்டில்களும் இருப்பதை கண்டு பிடித்தனர். உடனே அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 35) என்பதும், புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து டிரைவர் தியாகராஜனையும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுப்பாட்டில்களை திண்டிவனம் மது விலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப் படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.#tamilnews
    ×