என் மலர்
நீங்கள் தேடியது "Walkway"
- அன்புமணி ராமதாஸ் பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கினார்.
- டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான விரிசல் விரிவடைந்து வருகிறது. 2 பேரும் தனித்தனியாக பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
அதன்படி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைபயணம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பிரசார பயணத்தை சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார்.
100 நாட்கள் முக்கிய தொகுதிகளுக்கு சென்று பா.ம.க. நிர்வாகிகளையும், பொதுமக்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டாக்டர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ், இந்தப் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸ் டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
- விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பெங்களூரு:
பெங்களூருவில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் உள்ள நடைபாதைகளில் செடிகள் வைத்தும், தொட்டிகள் வைத்தும், இரும்பால் ஆன தூண்கள் வைத்தும் மாநகராட்சியால் அழகு படுத்தப்படுகிறது.
ஆனால் நகரில் பல பகுதிகளில் நடைபாதையின் மேலே போடப்பட்டு இருக்கும் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி உள்ளது. விக்டோரியா லே-அவுட், 1-வது கிராசில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதையே மாயமாகி இருக்கிறது. நடைபாதையையொட்டி ஒருபுறத்தில் செடிகள் முளைத்து நிற்பதுடன், அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இன்னும் சிறிது தூரத்தில் நடைபாதையே தெரியாத அளவிற்கு அதன்மீது கட்டிட கழிவுகள், மண் குவியல் கிடக்கிறது. நடைபாதையில் கழிவுகள் கிடப்பதால், அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்கிறார்கள். விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பாதசாரிகள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், அவர்கள் மீது வாகனங்கள் மோதி விட வாய்ப்புள்ளது. எனவே பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக அங்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்றும், ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது.
- பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
உடுமலை :
உடுமலையின் மையப்ப குதியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுற்றுப்புற கிராமங்கள் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பஸ் நிலையம் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை ஒட்டியவாறு பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதி ல்லை.இதனால் நடைபாதை அமைக்க ப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதும க்களுக்காக தொடங்க ப்படுகின்ற எந்த ஒரு திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருப்பது வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் தொடரும் அலட்சியம் காரணமாக ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே சம்பந்த ப்பட்ட நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.
- அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் தவறான செயல்களால் இப்பாதையில் மது பாட்டில்களும், மாட்டு சாணங்களும் கிடக்கின்றது. தினமும்் இரவு சிலர்் மது குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி சொல்கின்றனர்.
இதனால் நடைபயிற்சிக்காக தினமும் வரும் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






