என் மலர்tooltip icon

    இந்தியா

    விக்டோரியா லே-அவுட்டில் நடைபாதையை காணோம்!... தேடும் பாதசாரிகள்
    X

    விக்டோரியா லே-அவுட்டில் நடைபாதையை காணோம்!... தேடும் பாதசாரிகள்

    • குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் உள்ள நடைபாதைகளில் செடிகள் வைத்தும், தொட்டிகள் வைத்தும், இரும்பால் ஆன தூண்கள் வைத்தும் மாநகராட்சியால் அழகு படுத்தப்படுகிறது.

    ஆனால் நகரில் பல பகுதிகளில் நடைபாதையின் மேலே போடப்பட்டு இருக்கும் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி உள்ளது. விக்டோரியா லே-அவுட், 1-வது கிராசில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதையே மாயமாகி இருக்கிறது. நடைபாதையையொட்டி ஒருபுறத்தில் செடிகள் முளைத்து நிற்பதுடன், அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    இன்னும் சிறிது தூரத்தில் நடைபாதையே தெரியாத அளவிற்கு அதன்மீது கட்டிட கழிவுகள், மண் குவியல் கிடக்கிறது. நடைபாதையில் கழிவுகள் கிடப்பதால், அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்கிறார்கள். விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.

    பாதசாரிகள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், அவர்கள் மீது வாகனங்கள் மோதி விட வாய்ப்புள்ளது. எனவே பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக அங்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்றும், ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×