சாராயம், போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ்அப் எண்

போலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்
சாராயம், போலி மது பாட்டில்கள் விற்பனை குறித்து தகவல் அளிக்க வாட்ஸ்அப் எண்
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் சாராயம் காயச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய தகவல் அளிக்க மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் புதியதாக பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாராயம் காய்ச்சுதல், ஊறல்கள் போடுதல், போலி மதுபானம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மது விற் பனை மற்றும் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தகவல்களை 9498188755, 86376 61845 எண்களில் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com