பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது

பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
பண்ருட்டியில் சாராய வியாபாரி கைது
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. அதன்பேரில், பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது49) என்பவர் சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏராளமான புதுவை சாராய பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com