பா.ஜ.க எம்.பியின் மதுபான விருந்து.. மது பாட்டில்களுக்கு முண்டியடித்த தொண்டர்கள் - சர்ச்சை வீடியோ

கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
பா.ஜ.க எம்.பியின் மதுபான விருந்து.. மது பாட்டில்களுக்கு முண்டியடித்த தொண்டர்கள் - சர்ச்சை வீடியோ
Published on

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி ஒருவர் கட்சித் தொடர்களுக்கு அசைவ உணவுடன் மது விருந்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.பி ஆனவர் சுதாகர்.

தற்போது இவர் தனது வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக தொண்டர்களுக்கு அசைவ உணவுடன் மது பாட்டில்களை விநியோகித்து மது விருந்து வைத்துள்ளார். மது பாட்டிலைகளை வரிசையில் நின்று பாஜக தொண்டர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருந்து நடந்தப்போவதாக போலீசிடம் அனுமதி வாங்கிய சுதாகர், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விநியோகித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் பாஜக எம்.பி யின் செயலுக்கு அம்மாநில துணை முதலவர் டி.கே.சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த  சம்பவத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவினரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத்திடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com