search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருமகள்"

    • திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
    • திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.

    இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.

    ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலத்தில் கடந்த 16-ந் தேதி இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இளம்பெண்ணின் தற்கொலைக்கு தூண்டிய மாமியார் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமர்.

    இவரது மனைவி கவிதா (வயது 25). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அதிகாரி உதவி கமிஷனர் அசோகன் தொடர்ந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    அதில், கவிதா தற்கொலைக்கு அவரது மாமியார் கல்யாணி (52), தொந்தரவு செய்ததே காரணம் என தெரியவந்தது. இதனால் கல்யாணியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    • மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வல்லவிளை குருசடி வளாகத்தைச் சேர்ந்தவர் மேரிசைனி (வயது 32). இவரது மாமியார் டெல்பி.

    இவர்கள் இருவரும் வல்ல விளையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்த னர். மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பஸ் நிறுத் தத்தில் பஸ் நின்றபோது டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலிச் செயினை இளம்பெண் ஒருவர் பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

    இதை பார்த்த ஷைனி அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தார். உடனே பொது மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து மார்த்தாண் டம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்திய போது பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பவானி (39) என்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பவானிக்கு குமரி மாவட்டத்தில் வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானியுடன் அவரது கூட்டாளிகள் யாரும் வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மூன்று பெண்களிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்கப்பட்டது இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×