என் மலர்
இந்தியா

VIDEO: நீதிமன்ற வாசலில் குடுமிப்பிடி சண்டை.. மாமியார் - மருமகள் ஆக்ரோஷ மோதல்
- விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது
மகாராஷ்டிராவில் நீதிமன்றத்துக்கு வெளியே மாமியாரும் மருமகளும் சண்டை போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியே மாமியார் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வரும் இந்த வீடியோவில், மாமியாரும் மருமகளும் ஒருவரையொருவர் உதைத்தும், குத்தியும் தாக்கிக் கொள்கிறார்கள். தலைமுடியை பிடித்து இழுப்பதும் உடைகளை கிழிப்பதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சிறிது நேரத்திலேயே மொத்த குடும்பமும் சண்டையில் ஈடுபட்டது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
சம்பவ இடத்தில் இருந்த சில பெண் போலீசும் வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து நின்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு வேறு சிலர் நிலைமை மோசமடைவதை கவனித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.






