மருமகளுக்கு சிறுநீரகம் தானம் செய்த மாமியார்

பொதுவாக மாமியார், மருமகள், எலியும் பூனையுமாக சண்டையிட்டுகொள்வதை தான் பார்த்திருப்போம். தற்போது 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருமகளுக்கு சிறுநீரகம் தானம் செய்த மாமியார்
Published on

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா மாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தாபாய். இவருக்கு திருமணமாகி பிரகாஷ் என்ற மகன் உள்ளார். பிரகாசுக்கும்- பாசம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் பிரகாசின் மனைவி பாசம்மா கடந்த 9 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதியடைந்து வந்தார். அவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவரது மாமியார் சாந்தாபாய் அவரது சிறுநீரகத்தை தனது மருமகளுக்கு தானமாக வழங்க முன்வந்தார். அதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சாந்தாபாயிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து. மருமகள் பாசம்மாவுக்கு டாக்டர்கள் பொருத்தினர். தற்போது 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பொதுவாக மாமியார், மருமகள், எலியும் பூனையுமாக சண்டையிட்டுகொள்வதை தான் பார்த்திருப்போம். ஆனால் சாந்தாபாய் தனது மருமகளின் உயிரை காப்பாற்ற தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com