என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே - மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதான 3 பேர் சிறையில் அடைப்பு
ஜெயங்கொண்டம், நவ.24-
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் அருண்பிரசாத் (வயது 28). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.
இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி இந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்ய ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், சேலம் மாவட்டம், வீராணம் கிராமத்தை சேர்ந்த வீமனூர் தங்கராஜ் மகன் சரவணன்(19), மோட்டூர் கோவிந்தசாமி மகன் கோகுலகண்ணன்(19), கோரத்துப்பட்டி சுப்பிரமணியன் மகன் சந்திரன்(20) ஆகிய 3 பேரும், அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒரு மோட்டார் சைக்கிள், சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






