search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம்"

    • ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.
    • ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.

    ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன.

    மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால்.

    ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.

    இது 5வது சபையாகும்.

    இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து, விடியற் காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார்.

    பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்குச் செல்வர்.

    ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.

    இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

    • பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர்.
    • இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.

    பேரம்பலத்தில் ஐந்து மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கின்றனர்.

    இங்குதான் மாதந்தோறும் திருஆதிரை நட்சத்திரத்தன்று சோமாஸ்கந்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இங்குதான் பொது தீட்சதர்கள் ஆலயப் பணிகள், வழிபாடுகள் குறித்து சபை கூட்டுவர்.

    இப்பேரம்பலத்தை, மணவில் கூத்தனான காலிங்கராயன் விக்கிரசோழன் செம்பினால் வேய்ந்தான்.

    இப்பேரம்பலத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் திருப்பணி செய்தான்.

    • சிதம்பரத்திற்கு ‘‘நிருத்த சேத்ரம்’’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
    • சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.

    சிதம்பரத்திற்கு ''நிருத்த சேத்ரம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

    ஆடல்வல்லான் ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இது.

    சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடனப் போட்டி நடக்கும் போது சுவாமி தமது காது குண்டலம் கீழே விழ அதை தனது வலது கால் விரல்களால் எடுத்து காதில் மாட்டுமாறு காலை மேலே தூக்கி நடனம் ஆடிடவே அம்பாள் காலை தூக்கி ஆட முடியாமல் போகவே சுவாமி ஆடலில் வெற்றி பெற்றார்.

    இத்தகு தெய்வ திருநடன சிறப்பு பெற்ற இடம்தான் நடனசபை என்ற நிருத்த சபை ஆகும்.

    சுவாமி இங்கு ஆடிய தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர்.

    சுவாமிக்கு தென்பகுதியில் ஸ்ரீசரபேஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.

    இவருக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்ய சகல தோஷங்களும் விலகும்.

    ராகுகாலத்தில் நெய்தீபம் ஏற்றினால் சிறந்த பலன்களைப் பெற்று தரும்.

    • சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.
    • கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது.

    சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது (எதிரம்பலம்) பொன்னம்பலம் என்ற கனகசபை.

    நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடக்கும் இடம் இதுவேயாகும்.

    இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு தினசரி ஆறுகால பூஜையும், பகல் இரண்டாம் காலத்தில் ரத்தின சபாபதிக்கு அபிஷேக வழிபாடுகளும் நடைபெறும்.

    பொன்னம்பலத்தின் முகப்பை ஆதித்த சோழன் கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த மாற்றுயர்ந்த பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ளார்.

    கனகசபையின் 18 தூண்டுகள் 18 புராணங்களை குறிக்கிறது.

    கனகசபையின் ஐந்து தளவரிசைக் கற்கள் பஞ்சபூதங்களின் தத்துவத்தை குறிக்கும்.

    கனகசபையில் நின்றுதான் சிதம்பர ரகசியத்தை பக்தர்கள் தரிசிப்பார்கள்.

    மேலும் ஆடல் வல்லானின் ஆட்டத்தை கனக சபையின் மூலமே தரிசிக்க முடியும்.

    • சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன.
    • ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும்.

    சிதம்பரம் தலத்தில் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய 5 சபைகள் உள்ளன.

    இந்த 5 சபைகளின் சிறப்புகள் வருமாறு:

    சித்சபை

    சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பு அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.

    வாஸ்து, ஆகம விதிகள் பிறழாது நெறிப்பட அமைந்த கோவில் இது.

    குறிப்பாக, சித்சபையானது மரத்தால் நமது உடல் அமைப்பை அப்படியே ஒத்துள்ளது.

    சித்சபை மேல் 21600 பொன் ஓடுகள் பொருத்தி, 72000 ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.

    ஒரு மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கை 72000 அவன் ஒரு நாளைக்கு விடும் சுவாச காற்றின் எண்ணிக்கை 21600.

    மேல் உள்ள 9 கலசங்கள், 9 சக்திகள், நவரத்தினங்கள், நவகிரகங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

    9 வெளிவாசல்கள் மனிதனின் 9 துவாரங்களை குறிக்கும்.

    224 பலகை அமைப்புகள் 224 உலகங்களை குறிக்கும். 64 சந்தன கை மரங்கள் ஆயகலைகள் 64ஐ குறிக்கும்.

    சதாசிவ பீட 4 தங்க தூண்களும் 4 வேதங்களை குறிக்கும்.

    அடுத்து சதாசிவ பீட 6 தங்க தூண்களும் 6 சாஸ்திரங்களை குறிக்கும்.

    ருத்ரபீட 28 மரத்தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும்.

    ருத்ரபீட ரகசியம் பார்த்திடும் 96 பல கனிகள் (ஜன்னல்) 96 தத்துவங்களை குறிக்கும்.

    விஷ்ணு பீடத்தின் கதவுகள் அவித்தையையும், ரகசியத் திரை மாயையும் குறிக்கும்.

    ஐந்து தூண்களும் ஐம்பொறிகளை குறிக்கும் இங்கு நடராஜப் பெருமானின் திருமுடியிலுள்ள சந்திரனில் இருந்து உண்டான ஸ்படிகலிங்கமும், மாணிக்க மயமான ரத்தின சபாபதியும், சுவர்ண ஆகர்ஷண பைரவரும், நித்ய உத்ஸவர் முதலானவர்களும் எழுந்தருளியிருக்கின்றனர்.

    இச்சிற்றம்பலத்தின் உள்ளே செல்வதற்கு ஐந்து படிகள் இருக்கின்றன.

    இவற்றிற்கு பஞ்சாட்சரபடிகள் என்று பெயர். இப்படிகள் இருபுறமும் யானை உருவங்கள் இருக்கின்றன.

    சித்சபையில் நிகழும் ஆனந்த நடனத்தை சிவகாம சுந்தரியார் இடைவிடாமல் கண்டுகளிப்பது, ஆன்மாக்களின் பிறவிப்பிணியைப் போக்குவதற்கே என்று குமரகுருபர சுவாமிகள் பாடியுள்ளார்.

    ஆடல்வல்லான் ஆடல்புரியும் இடம் சிற்றம்பலம் இதையே தான் சித்சபை என்று அழைக்கப்படுகிறது.

    நடராஜர் இச்சபையில் திருநடனம் புரிந்து ஐந்து தொழில்களையும் நிகழ்த்துகிறார்.

    • வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.
    • சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும், அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோயில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ஆகிய தென்னிந்தியாவில் உள்ள கோயில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியில் இருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    • செந்தமிழ்செல்வன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலக்கண்ணன் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). சிதம்பரம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் செந்தமிழ்செல்வன் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த 15-ந்தேதி வயிற்று வலி அதிகமானதால் வலியில் அலறி துடித்தார்.

    இதனால் மன வேதனையில் இருந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் சகோதரர் நடராஜன் சிதம்பரம் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்? என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
    • அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு.

    மதுரை

    மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தை யும், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட சிறுவர் பூங்கா வையும் பயன் பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கோவில் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விைரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த 2 மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 501 கோவில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவில், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவி லுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 812 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது.எனவே இந்த ஆட்சியை "குட முழுக்கின் உற்சவ ஆட்சி" என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்ட பத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறை வடையும்.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகள் நடைபெறும். அழகர் மலையில் சாலை அமைக்கும் பணிகளுக்காக வனத்துறை யின் அனுமதி பெறப்பட்டு ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் - பக்தர் உறவு சமூகமாக இல்லா விட்டால் அதை கேட்கும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்த படியாக கருதுவது தீட்சிதர்களையும், அர்ச்ச கர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சி தர்களுக்கு உண்டு. அப்படிபக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும். கோவிலில் சட்டமீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு.

    உயர்நீதிமன்ற ஆணையை தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறியஅர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கன் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை.

    பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. நேர்மையாக, மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் வசம் சொத்துக்கள் இருந்த போது கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான்கள்சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்க் அனைவருக்கும் பாதுகாப்பு என என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் சுந்தரபாண்டியன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டி, கவுன்சிலர் காளிதாஸ் உள்பட பலர் உள்ளனர்.

    • ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும்போது தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபட்டாலும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்துவார்கள்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலர் தொகுதி மாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான லடாய் எல்லோரும் அறிந்ததே.

    இந்த நிலையில் ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது. இதை சாக்காக வைத்து வருகிற தேர்தலில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    முன்பு அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை சொல்லித்தான் ஜோதி மணியை வெற்றி பெற செய்தோம்.

    இப்போது அதே போல் ஜோதிமணியும் தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார். எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. ஒரு தொகுதியை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் கரூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானமே போட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தொகுதி தி.மு.க.வுக்குதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசியது உறுதிப்படுத்தி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

    எனவே சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. அதை விடுதலை சிறுத்தைக்கு விட்டுக்கொடுக்க வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதிக்கு மாற விரும்புகிறார். காரணம் விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவும் அந்த தொகுதியில் வைகோ மகனை போட்டியிட வைக்கவும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    எனவே காங்கிரசுக்கு சாதகமான சிவகங்கையை மாணிக்கம் தாகூர் குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியின் 'சிட்டிங்' எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் விட்டுக் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் தனக்கு கிடைக்க ராகுல் உதவுவார் என்று நம்புகிறார்.

    ஆனால் ப.சிதம்பரம் சோனியாவிடம் செல்வாக்குடன் இருப்பவர். எனவே யார் கை ஒங்குமோ அதை பொறுத்தே இந்த தொகுதியின் வேட்பாளரும் முடிவாகும்.

    • சிதம்பரத்தில் ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
    • வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம் பரம் மாலைகட்டி தெரு நகராட்சி நடுநிலை பள்ளி எதிரே வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த துணிகளை திருடி சென்றனர். இேத போன்று செருப்புக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கி ருந்த பணத்தை கொள்ளை யடித்து சென்ற–னர்.

    இந்த வணிகவளாகம் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இன்று காலை கடைகள் திறந்து இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உரியைாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமை யாளர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுபற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறர்கள். சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்ப–வங்கள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மனைவி சுலோசனா. இவர் கடந்த 10-ந் தேதி அன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் ஊருக்கு திருவிழாவை பார்க்க சென்றார்

    மீண்டும் 13ம் தேதி அன்று மாலை தனது வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 18 பவுன் நகைகள் (செயின்,தோடு,மோதிரம் என) காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்க கதவை மர்மநபர்கள் யாரோ உடைத்து திருடிச் சென்றுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அண்ணா மலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 28-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 29-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 30-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, ஜூலை 1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ந் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    ×