search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shoplifting"

    • பணம் மற்றும் மருந்துகளை எடுத்து சென்றனர்
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் துணி கடை, மளிகை கடை, டீ கடை உள்ளிட்டவைகள் உள்ளன.

    இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நாட்றம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோ டி காணப்பட்டது.

    நள்ளிரவில் டீ கடையின் பூட்டை உடைத்து கும்பல் உள்ளே சென்றனர். கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

    அதேபோல் அதே பகுதியில் உள்ள சாதிக் என்பவரின் எண்ணெய் கடையில் பணம் மற்றும் எண்ணை பாட்டில்கள், துணிக்கடையில் பணம், பட்டுப் புடவைகள் மற்றும் துணிகள், வெங்கடேஸ்வரா மருந்து கடையில் பணம் மற்றும் மருந்துகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    கொள்ளையர்கள் அடுத்தடுத்து 6 கடைகளில் தங்களது கைவரிசையை அரங்கேற்றி உள்ளனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்திற்கு மேலாக இருக்கும் என கூறப்ப டுகிறது. இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கேமரா காட்சிகள் வைத்து விசாரணை
    • ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றார்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென் னாத்தூர் அடுத்த சிறுநாத் தூர் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர். இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அக்பர் வழக் கம்போல் கடையில் விற்பனை முடிந்ததும் பணத்தை கல் லாப்பெட்டியில் வைத் துவிட்டு, கடையை பூட் டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். கடையைத் திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது கல்லாப்பெட்டி திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச் சியடைந்தார். இதையடுத்து கடை யில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு களை ஆய்வு செய்தார்.

    அதில், மர்ம நபர் ஒரு வர் கடையில் திருடும் காட்சி பதிவாகி இருந் தது. உடனே இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். பின் னர், சிசிடிவி கேமரா பதி வுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் கடை யின் பின்பக்கம் உள்ள தகர சீட்டை கழற்றிவிட்டு கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாப்பெட் டியை திறந்து அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும், அந்த நபர் கடையில் மாட்டி வைத்திருந்த சாமி படத்தை பார்த்து பக்தியுடன் கும்பிட்டார்.

    பின்னர் திருட்டில் விட்டு ஈடுபட்டார். புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசி டிவி கேமரா பதிவுகளை வைத்து கடையில் கைவ ரிசை காட்டிய மர்ம நபரை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    • சம்பவத்தன்று மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவரி மனைவி சுதா. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதன் அருேக பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட பணிகளுக்காக மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் (25) என்பவரை அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று சுதாவின் மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சோலூர் ஊராட்சி ராஜகோபால் பகுதியை சேர்ந்த ரவி (வயது 56). மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.2 ஆயிரம் மளிகை பொருட்கள் ஆகி நேற்று இரவு கடையில் இருந்து ரூ.2 ஆயிரம், பணம் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ரவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டப்பட்டது.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு வெளி வீதி முத்து கருப்ப பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து ராஜா (48). இவர் கீரைத்துறை, ராணி பொன்னம்மாள் தெருவில் உள்ள இரும்பு கடையில் மேலாளராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். மர்ம நபர்கள் கடையின் ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், கீ- போர்டு, மவுஸ், கட்டிங் பிளேடு உள்பட ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும்.
    • கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    நாகப்பட்டனம்:

    கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் சார்பில் பேரணியாக புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள், லயன்ஸ் கிளப், நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கம், நாகை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம், நாகை இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம், மீனவ கிராம பஞ்சாயத்தாரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    உடனடியாக காரைக்கால்-வேளாங்கண்ணி வழித்தடம் மற்றும் நாகை வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் ‌இயக்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கடையடைப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கோஷங்கள் எழுப்பினர்.

    • சிதம்பரத்தில் ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
    • வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம் பரம் மாலைகட்டி தெரு நகராட்சி நடுநிலை பள்ளி எதிரே வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த துணிகளை திருடி சென்றனர். இேத போன்று செருப்புக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கி ருந்த பணத்தை கொள்ளை யடித்து சென்ற–னர்.

    இந்த வணிகவளாகம் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இன்று காலை கடைகள் திறந்து இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உரியைாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமை யாளர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுபற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறர்கள். சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்ப–வங்கள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    ×