கொடைக்கானலில் மளிகை கடையில் திருடியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சம்பவத்தன்று மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
கைதான ஜெயராமன்.
கைதான ஜெயராமன்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவரி மனைவி சுதா. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதன் அருேக பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட பணிகளுக்காக மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் (25) என்பவரை அழைத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சுதாவின் மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com