கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டு

கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டப்பட்டது. கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்குள் புகுந்து கம்ப்யூட்டர் திருட்டு
Published on

மதுரை

மதுரை தெற்கு வெளி வீதி முத்து கருப்ப பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து ராஜா (48). இவர் கீரைத்துறை, ராணி பொன்னம்மாள் தெருவில் உள்ள இரும்பு கடையில் மேலாளராக உள்ளார்.

சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் கடையை மூடி விட்டு சென்றனர். மர்ம நபர்கள் கடையின் ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்ப்யூட்டர், கீ- போர்டு, மவுஸ், கட்டிங் பிளேடு உள்பட ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com