search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery robbery"

    • ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • பழனியம்மாள் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38)இவரது மனைவி ஜீவா (வயது 32). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் ஜீவா வீட்டின் கதவை உடைத்து ஜீவா வை கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 7பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    பின்னர் அதே தெருவில் வசிக்கும் பழனியம்மாள் (வயது 65) வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். எராவூர் அருகில் உள்ள மேலூர் பஸ் நிறுத்தம் அருகே தனியாக வசிக்கும் பூபதி (வயது 60) வீட்டில் நேற்று நள்ளிரவில் 2 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். வீடடில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் பூபதியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சுரேஷ் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது.

    கோவை

    கோவை பீளமேடு அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37). கல்லூரி பேராசிரியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது பேராசிரியர் சுரேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பி சுரேஷ் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை இருகூர் எல்ஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆஷா ராணி (வயது 34). இவர் நர்சாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ஆஷா ராணி இரவு நேரத்தில் தூங்குவதற்காக தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அதேபோல அவர் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு தூங்க சென்றார்.

    பின்னர் மறுநாள் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 3½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி கதிர்வேல் (57) என்பவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அவரது வீட்டில் இருந்த மர பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இதுகுறித்து ஆஷா ராணி மற்றும் கதிர்வேல் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீடுகளில் நகைகளை கொள்ளை யடித்த திருடர்களை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கருமலை செட்டிப்பாளையம் பகுதியில் இதேபோன்று 2 வீடுகளில் திருட்டு போயிருந்தது.

    எனவே இந்த வீடுகளில் கொள்ளை அடித்தது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அந்த வீடுகளில் கைப்பற்றிய தடையங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமல ம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயவரதன் சென்னை ெரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி விஜயலட்சுமி. . தற்போது ஜெயவரதன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளார். விஜயலட்சுமி தனியாக கொமலம்பட்டு பகுதியில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் டி.பரங்கனி பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 22) கூலித்தொழிலாளி. இவர் நேற்று கொமலம்பட்டு பகுதிக்கு வந்தார். விஜயலட்சுமி கடையில் இருப்பதை பார்த்து அவரது வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 23 பவுன் நகையை திருடி சென்றார். நகையை திருடிச் சென்ற பின்னரும் விஜயலட்சுமியின் கடையின் அருகிலேயே இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர்.அப்போது விஜயலட்சுமியின் வீட்டில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் விஜயலட்சுமி வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் மூட்டையாக கட்டி வைத்திருந்த 20 பவுன் நகையை கவுதமிடம் இருந்து மீட்டனர். மீதமு ள்ள 3 பவுன் நகையை கவுதமிடம் கேட்டதற்கு அவர் 20 பவுன் நகை மட்டும் தான் திருடினேன் என்று கூறினார். இதனால் பொதுமக்கள் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமை மீட்டு வழக்கு பதிவு செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் நகை மீட்டு விஜயலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.

    • வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே லால்புரம் அருகே காமராஜ்நகர் 3-வது குறுக்கு வீதியில் வசிப்பவர் செந்தில்நாதன் (வயது 38). இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு தனி அதிகாரியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவியும் பல்கலைக் கழகத்திலேயே பணி செய்வதால், 2 பேரும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு சென்று மதிய உணவிற்கும், மாலையில் வீட்டிற்கு வருவர்.

    அதன்படி நேற்று காலை 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி 2 பேரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வேலைக்கு சென்றனர். மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த இவர்களால் வீட்டின் முன்கதவை திறக்கமுடியவில்லை. உள்பக்கம் பூட்டியிரு க்கலாம் என்ற சந்தேகத்தில் பின்பக்கமாக சென்று செந்தில்நாதன் பார்த்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் தங்க நகை திருடப்பட்டு துணிகள் அனைத்தும் வெளியில் தூக்கிவீசப்பட்டிருந்தது.

    இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசாருக்கு செந்தில்நாதன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை யிலான போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழை க்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் கேரேகையை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர். காமராஜ் நகர் பகுதியைச் சுற்றிவந்த மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    இது தொடர்பாக சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர். பட்ட ப்பகலில் சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடந்தது அப்பகுதி மக்க ளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
    • மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார் . அதன்பின்னர் நேற்று இரவு லதா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த14 பவுன் நகை திருடு போனதால் லதா அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் மர்ம நபர்கள் எப்படி வீட்டுக்குள் வந்தார்கள் என பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5.50 லட்சமாகும். தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • வீட்டின் கதவு உடைக்க ப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி உமா. இவர் அதேபகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை ஒத்திக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.

    கடந்த சில மாதமாக இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வரு கின்றனர். தீபாவளிக்கு வீட்டிற்கு வந்தவர்கள் மீண்டும் திருப்பூர் சென்று விட்டனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் கதவு உடைக்க ப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து அக்கம்பக்க த்தில் இருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உமாவிற்கும், போன் செய்து தெரிவித்தனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து கவரிங் நகைக ளுக்கு இடையில் இருந்த தங்க நகைளை மட்டும் அறிந்து கொள்ளை யடித்து சென்றது விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு என்ன என்பது குறித்து தெரிய வில்லை. தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
    • அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள நவல்பட்டு அய்யன் புதூர் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 47). இவர் திருச்சியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக தனபால் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த 13 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, 2 வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என மதிப்பிட ப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் இரும்பு ராடால் கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பீரோக்களை திறந்து பார்த்தனர். அந்த பீரோக்களின் சாவி அதன் அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

    அதில் துணிமணிகளை தவிர நகை பணம் எதுவும் வைக்கவில்லை. ஆனால் சல்லடை போட்டு தேடி பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனபால் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார் தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்துள்ளார்.

    குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
    • தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை :

    கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி.

    கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வலையல் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அன்போணி (வயது 65). ஓய்வு பெற்ற ஹெல்த் சூப்பர்வைசர். கடந்த 3-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அன்போணி காரமடை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார்.
    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு பிரசாத் (வயது 29). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றார். இரவு தோட்டத்து வீட்டில் தங்கினார்.

    நள்ளிரவு விஷ்ணு பிரசாத் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு பிரசாத் டவுன் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மனைவி சுலோசனா. இவர் கடந்த 10-ந் தேதி அன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் ஊருக்கு திருவிழாவை பார்க்க சென்றார்

    மீண்டும் 13ம் தேதி அன்று மாலை தனது வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 18 பவுன் நகைகள் (செயின்,தோடு,மோதிரம் என) காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்க கதவை மர்மநபர்கள் யாரோ உடைத்து திருடிச் சென்றுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அண்ணா மலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஆணைக்குட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ஜெயலட்சுமியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    சம்பவத்தன்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ராஜபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரை தோப்பூரை சேர்ந்த சசிகுமார்(22), திருநகர் 3-வது ஸ்டாப்பை சேர்ந்த அழகுராஜா(21) எனவும், இவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை பறித்தது தெரியவந்தது. 2 பேரையும் ஆமத்தூர் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×