சின்னசேலம் அருகே பெண்ணை கத்தியால் குத்தி 7 பவுன் நகை கொள்ளை: முகமூடி அணிந்து வந்த 2 பேர் கைவரிசை

ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.பழனியம்மாள் வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.
சின்னசேலம் அருகே பெண்ணை கத்தியால் குத்தி 7 பவுன் நகை கொள்ளை: முகமூடி அணிந்து வந்த 2 பேர் கைவரிசை
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எராவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38)இவரது மனைவி ஜீவா (வயது 32). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஜீவா வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் ஜீவா வீட்டின் கதவை உடைத்து ஜீவா வை கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 7பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

பின்னர் அதே தெருவில் வசிக்கும் பழனியம்மாள் (வயது 65) வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். எராவூர் அருகில் உள்ள மேலூர் பஸ் நிறுத்தம் அருகே தனியாக வசிக்கும் பூபதி (வயது 60) வீட்டில் நேற்று நள்ளிரவில் 2 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். வீடடில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரத்தில் பூபதியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com