search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நகைகள் கொள்ளை
    X

    தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நகைகள் கொள்ளை

    • திருச்சி தனியார் பஸ் நிறுவன மேலாளர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்
    • அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்

    திருச்சி:

    திருச்சி அருகே உள்ள நவல்பட்டு அய்யன் புதூர் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 47). இவர் திருச்சியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவியும், மகளும் தீபாவளிக்கு ஆடைகள் வாங்குவதற்காக நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். பிற்பகல் 3 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக தனபால் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த 13 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு, 2 வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் என மதிப்பிட ப்பட்டுள்ளது.

    கொள்ளையர்கள் இரும்பு ராடால் கதவை உடைத்து திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பீரோக்களை திறந்து பார்த்தனர். அந்த பீரோக்களின் சாவி அதன் அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

    அதில் துணிமணிகளை தவிர நகை பணம் எதுவும் வைக்கவில்லை. ஆனால் சல்லடை போட்டு தேடி பூஜை அறையில் சாமி படங்களுக்கு பின்னால் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தனபால் நவல்பட்டு போலீசில் புகார் செய்தார் தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் மணி வழக்கு பதிவு செய்துள்ளார்.

    குற்றவாளிகளை பிடிக்க துணை போலீஸ் பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×