சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு: வீட்டுக்கதவை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை

வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு:  வீட்டுக்கதவை உடைத்து   14 பவுன் நகை கொள்ளை
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் லதா (வயது 46). இவர் சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார் . அதன்பின்னர் நேற்று இரவு லதா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த14 பவுன் நகை திருடு போனதால் லதா அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் மர்ம நபர்கள் எப்படி வீட்டுக்குள் வந்தார்கள் என பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே வந்து திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5.50 லட்சமாகும். தகவல் அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com