பெரியகுளத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் கதவு உடைக்க ப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள தாமரைக்குளம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி உமா. இவர் அதேபகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை ஒத்திக்கு வாங்கி குடியிருந்து வருகிறார்.

கடந்த சில மாதமாக இவர்கள் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வரு கின்றனர். தீபாவளிக்கு வீட்டிற்கு வந்தவர்கள் மீண்டும் திருப்பூர் சென்று விட்டனர். இந்நிலையில் அவர்களது வீட்டின் கதவு உடைக்க ப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதுகுறித்து அக்கம்பக்க த்தில் இருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உமாவிற்கும், போன் செய்து தெரிவித்தனர். வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து கவரிங் நகைக ளுக்கு இடையில் இருந்த தங்க நகைளை மட்டும் அறிந்து கொள்ளை யடித்து சென்றது விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு என்ன என்பது குறித்து தெரிய வில்லை. தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com