சிதம்பரத்தில் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

செந்தமிழ்செல்வன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.
சிதம்பரத்தில் திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலக்கண்ணன் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). சிதம்பரம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் செந்தமிழ்செல்வன் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த 15-ந்தேதி வயிற்று வலி அதிகமானதால் வலியில் அலறி துடித்தார்.

இதனால் மன வேதனையில் இருந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் சகோதரர் நடராஜன் சிதம்பரம் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com