search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா"

    • புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
    • கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர்.

    புதுச்சேரி:

    நர்சுகள் தேர்வில் தற்காலிக நர்சுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதன்பின் எதிர்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப முடியவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் தடையாக உள்ளனர்.

    கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அரசு செயலர், தலைமை செயலர் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதை தடுக்கின்றனர்.

    முதலமைச்சரிடம் நர்சுகளோடு சென்று கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சர், எதையும் செய்ய முடியவில்லை.

    தற்காலிக செவிலியர்களுக்கே 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்க முடியவில்லை. இவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள்? என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.என மன உளைச்சலை முதலமைச்சர் கொட்டியுள்ளார். அவர் செய்ய நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை.

    பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த முதலமைச்சர் பின்பக்கமாக போய்விடலாமா? என சொல்லும் அளவுக்கு முதலமைச்சரையும், தேர்வு செய்த அரசையும் மதிக்காமல் தனி அரசு நடத்தி வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள், சட்டமன்ற அறிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. செவிலி லயர்களுக்கு ஒரு ஆண்டுக்குகூட பணி வழங்க முடியவில்லை.

    முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் எதையும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.

    இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. புதுவை மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகின்றனர்.

    எதிர்காலத்தில் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவையில் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். எல்லா கோப்புகளிலும் அவர் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி புதுவைக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
    • சேவையால் கோவையில் இருந்து பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    2020-ம் ஆண்டு வரை கோவை- இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் சேவை வழங்கப் பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவையை அந்நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்தது.

    இந்த விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை-இலங்கை இடையே கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. நிர்வாக காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.

    இலங்கை நாட்டின் கொழும்பு நகருக்கு கோவையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை கடந்த 2017-ல் தொடங்கியது. முதலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது.

    அதன் பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டது.

    கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2.35 மணியளவில் கோவையில் தரையிறரங்கும். மீண்டும் 3.35 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும்.

    சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓடுதள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    எனவே இலங்கை நாட்டுக்கு மீண்டும் தொடங்கப் பட உள்ள விமான சேவைக்கு ஸ்லாட் என்று சொல்லக்கூடிய நேரம், ஓடுபாதை, விமானம் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவு செய்தபின் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, ஒரு மணி பயண நேரத்தில் இலங்கை சென்றடையும். இந்த விமான சேவையால் கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும் என்றார்.

    • தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    தேனி:

    இந்தியாவில் மக்கள் தொகை உலகிலேயே முதலிடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    குடும்ப நலத்துறை அதிகாரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன் விளைவாக ஒருபெண்ணுக்கு 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் விகித பிறப்பு எனப்படும் இதனை கண்டறிந்து 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடையும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட குடும்பநலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திேலயே இது முதலிடம் ஆகும். இதனை குறைக்க குடும்ப நலத்துறை இலக்கு நிர்ணயித்து லேப்ராஸ்கோப்பி குடும்ப நல அறுவை சிகிச்சை நடத்தி வருகிறோம். கம்பம், பெரியகுளம், அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தால் ஆஸ்பத்திரியில் தங்காமல் ஒரே நாளில் வீட்டுக்கு சென்று விடலாம். தொற்று, வலி இருக்காது என்றார். குறிப்பாக மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் அதிக குழந்தை பேறினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
    • கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    • 13 நாட்களில் 74 பேர் பாதிப்பு
    • முஞ்சிறை ஒன்றியத்தில் கொத்துக்கொத்தாக பலரும் பாதிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

    மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர், திருவட்டார், ஒன்றியங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முஞ்சிறை ஒன்றியத்தில் கொத்துக்கொத்தாக பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வரு கிறார்கள்.

    நேற்று மாவட்டம் முழு வதும் 613 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட தில் 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.முஞ்சிறையில் 7 பேரும் கிள்ளியூர், திருவட்டார் ஒன்றியங்களில் தலா 2 பேருக்கும் மேல்புறம், குருந்தன்கோடு ஒன்றியங்க ளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒருவர் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளார்.

    கடந்த 13 நாட்களில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலேயே பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவில் பாதிப்பு அதிக ரித்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று வருவதால் இங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே கேரளாவிற்கு சென்று வரும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.கொரோனால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொட ர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தடுப்பூசி செலுத்தாதவர் அனைவரும் உடனடியாக பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    5 பேருக்கு கொரோனா பாதிப்பால் முககவசம் அணிய மருத்துவர்கள் அறிவுரை.

    சேலம்:

    கொரோனாவின் தாக்கம் முழுமையாக முடியாத நிலையில்,மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக, கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து, குடியிருப்புகளில் வசிக்கும் நபர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சேலத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 2 அல்லது 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி யுள்ளது. இதில் ஓமலூர், தலைவாசல், ஏற்காடு, பனமரத்துப்பட்டியில் தலா ஒருவரும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவரும் என்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்த்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்–கையும் அதிகரித்துள்ளது. தற்போது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவ, மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளில் சானிடைசர், முக கவசம் ஆகிய வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தடுப்பூசி செலுத்தாதவர்களே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • முஞ்சிறை ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முஞ்சிறை, திருவட்டார் ஒன்றியங்களில் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் 25 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்சிறை திருவட்டார் ஒன்றியங்களில் அதிகமா னோர் பாதிக்கப்பட்டு ள்ளனர். முஞ்சிறை ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    இதேபோல் திருவட்டார் ஒன்றியத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கிள்ளியூரில் இரண்டு பேரும் குருந்தன்கோடு ராஜாக்கமங்கலத்தில் தலா ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 72 வயது பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 72 வயது பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யிலும் 52 வயது ஆண் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வசித்துவந்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    பாதிப்பு அதிகமாக உள்ள முன்சிறை திருவ ட்டார் ஒன்றியத்தில் சுகா தாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்

    வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகி றார்கள். பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பா லானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    கொரோனா அதிகரித்து வருவதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    • கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தற்போது 7 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 1 என்று இருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

    • நெல்லையில் இன்று 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகம் உள்பட கொரோனா பாதிப்பு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல்லையில் தினசரி பாதிப்பு சராசரியாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டு வந்த நிலையில் இன்று 8 ஆக உயர்ந்துள்ளது.

    மாநகர பகுதியில் மட்டும் தினமும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இன்று காலை வெளியான பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் மாநகர பகுதியில் 3 பேரும், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 பேரும், ராதாபுரத்தில் ஒருவரும் அடங்குவர்.

    இந்நிலையில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனை–வரும் ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரி–யில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கொேரானா வைரஸ் வேகமாக பரவு கிறது.

    முஞ்சிறை திருவட்டார், கிள்ளியூர் ஒன்றியங்களில் தினமும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வரு கிறது. இதையடுத்து அந்த ஒன்றியங்களில் சுகாதா ரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.அந்த பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று மாவட்டம் முழு வதும் 377 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் கிள்ளியூர் தாலுகா வில் 2 பேருக்கும், முஞ்சிறை திருவட்டார் தாலுகாவில் தலா ஒருவருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேற்கு மாவட்ட பகுதி களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் சோ தனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பள்ளிக்கூடங்களும் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அங்கும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை சுகாதா ரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது.

    இந்தநிலையில் மீண்டும் தற்போது கொரோன ா பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பொறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற் று மேலும் அதிகரிக்க வாயப்பு உள்ளதால் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா மிகவும் குறைந்து வந்தது. நேற்றைய  கணக்கின்படி 59 பேருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. 

    இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும் அவர் எழுதிய கடித்தத்தில், தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
    ×