கொரோனா பாதிப்புடன் ஒருவருக்கு சிகிச்சை

புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.
கொரோனா பாதிப்புடன் ஒருவருக்கு சிகிச்சை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com