search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "treating"

    • புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
    • கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    • ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.
    • பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஓடைப்பகுதியில் சமீபகாலமாக தெரு நாய் கடித்துக் குதறியதில் 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் , அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர். பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை தொடர்ந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×