search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தினவிழா"

    • பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை:

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கி உள்ளன.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி தேசியக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். மேலும் காவல்துறையில் சிறப்பாக வேலை பார்த்த போலீசாருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

    குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகர அளவில் 1500 போலீசாரும், மாவட்ட அளவில் 1000 போலீசாரும் என மொத்தமாக 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தற்போது மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை பீளமேடு விமானநிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டபிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரெயிலில் வரும் பார்சல்கள் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    • குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
    • டெல்லி வான்பரப்பில் அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவு பிப்ரவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக மெரினா காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் 22, 24ஆம் தேதிகளிலும் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 2024 குடியரசு தினத்திற்கான முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    காவல்துறை, விமானப்படை, சிஐஎஸ்எப், ஆர்பிஎப், குதிரைப்படை, ஆயுதப்படை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்காவல் படை, NSS மற்றும் NCC மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக மெரினா காமராஜர் சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் 22, 24ஆம் தேதிகளிலும் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    • குடியரசு தினவிழாவில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
    • விரோத மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என முதல் மந்திரி குற்றம் சாட்டினார்.

    பெங்களூரு:

    தலைநகர் டெல்லியில் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இடம்பெற்று காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

    இதற்காக மத்திய அரசு முன்கூட்டியே மாநிலங்கள் அனுப்பும் மாடல்களை பரிசீலனை செய்து விழாவில் இடம்பெறும் ஊர்திகளை தேர்வு செய்யும்.

    இந்த ஆண்டு கர்நாடக மாநில ஊர்திகளைச் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பியிருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாநில ஊர்திகளை சேர்க்க வேண்டும் என கர்நாடகா அனுப்பிய அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல் மத்திய அரசு கர்நாடகாவை அவமானப்படுத்தியது என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

    • குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
    • கடந்த ஆண்டு நடந்த குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். நாட்டின் கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம்.

    இதற்கிடையே, குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என எல்சி பிரான்ஸ் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் அல் சிசி தலைமை விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார்.
    • பிரான்ஸின் ராணுவ அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

    குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தின விழா நடைபெறும். டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றுவார். மேலும், நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்புகள் நடைபெறும்.

    இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை விருந்தினராக ஜோ பைடன் கலந்து கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2020-ல் அப்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019-ல் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள், 2015-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014-ல் அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013-ல் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

    பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்திய பிரதமர் மோடி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசினர்.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மாரிச்சாமி, கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) சிறப்பு அணிவகுப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல்திறன் அடிப்படையில் 4-ம் ஆண்டு மாணவர் அபினாசுக்கு ''கேடட் அண்டர் ஆபீசர்'' என்ற ''ரேங்'' வழங்கப்பட்டது.

    4-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் அருணுக்கு கம்பெனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜென்ட் என்ற ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர் ராஜ்குமார், 2-ம் ஆண்டு மாணவர் கார்த்திக் ஆகியோருக்கு சார்ஜென்ட் ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர்களான பாலமுரளி, மனோஜ், சங்கவி ஆகியோருக்கு ''கார்பொரல்'' ரேங்கும் வழங்கப்பட்டது.

    கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 4-ம் ஆண்டு மாணவர் சிவ சுப்பிரமணியன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், உடற்கல்வி துறை இயக்குநர் சுந்தமூர்்த்தி மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.பெருமாள் தலைமை ஏற்று தேசிய கொடியினை ஏற்றினார். கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் பெருமாள் மாணவர் களிடையே பேசும்போது தாய்மொழி யையும் தாய்நாட்டையும் அனைவரும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

    கல்வியின் பயன் தன்னை உருவாக்கிய தாய்நாட்டிற்கு பயன் பெறுமாறு மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிந்து நம் நாட்டை வல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும். ஜெய் ஜவான், ஜெய்கிசான் என முன்னாள் பிரதமர்லால்பகதுர் சாஸ்திரி கூறியது போல அனைவரும் ராணுவத்தினரையும், விவசாயிகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

    மாணவர்கள் எங்கு பயில்கிறார்கள் என்பதை விட கல்வியை எவ்வாறு கற்கிறார்கள் என்பது முக்கியமாகும் என்று வாழ்த்தினார். இவ்விழாவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

    தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,

    என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.

    ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.

    5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.

    பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    • திருமங்கலத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
    • துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுதினவிழா நடந்தது. திருமங்கலம் நகராட்சியில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் தி.மு.க. நகரச்செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மையை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து தெற்குதெருவில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் லதா ஜெகன் தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் பார்த்தசாரதி தலைமையில் மாவட்டசெயலாளர் கோடை சே. அப்துல் காதர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயற்குழு அப்துல்ரகிம், மாவட்ட இணைசெயலாளர் செல்வா சேக்முகமது ,மாநகர தலைவர் ஜபருல்லா, மாநகரச்செயலாளர் ரகுமத்துல்லா ,மாநகரபொருளாளர் ராஜாமுகமது மற்றும் உறுப்பினர்கள் கணேசமூர்த்தி ,சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்து நன்றி கூறினார்.

    • விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    நாடுமுழுவதும் இன்று 74-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வானில் வண்ண பலூன்களையும், வெண்புறக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர போராட்ட தியாகிகள் 24 பேருக்கு சால்வை அணைத்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் விழாவில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1, 18,94 ,483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும் நிவாரண நிதியிலிருந்து நான்கு நபர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் போலீசார், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ×