search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் குடியரசு தினவிழா : 181 பேருக்கு ரூ.1.18 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
    X

    விழுப்புரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் மோகன் போலீஸ் அணி வகுப்பு மரியாதை எற்றுக்கொண்டார். 

    விழுப்புரத்தில் குடியரசு தினவிழா : 181 பேருக்கு ரூ.1.18 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

    • விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    நாடுமுழுவதும் இன்று 74-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வானில் வண்ண பலூன்களையும், வெண்புறக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர போராட்ட தியாகிகள் 24 பேருக்கு சால்வை அணைத்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் விழாவில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1, 18,94 ,483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும் நிவாரண நிதியிலிருந்து நான்கு நபர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் போலீசார், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×