திருமங்கலத்தில் குடியரசு தினவிழா

திருமங்கலத்தில் குடியரசு தினவிழா நடந்தது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர்.
திருமங்கலத்தில் குடியரசு தினவிழா
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் குடியரசுதினவிழா நடந்தது. திருமங்கலம் நகராட்சியில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். ஆணையாளர் டெரன்ஸ்லியோன், துணைத்தலைவர் ஆதவன் அதியமான் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் தி.மு.க. நகரச்செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மையை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து தெற்குதெருவில் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் முத்து, கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், பெல்ட்முருகன், காசிபாண்டி, சின்னசாமி, ரம்ஜான்பேகம் ஜாகீர், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் லதா ஜெகன் தேசியக் கொடியேற்றினார். துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர்கைலாசம், இளங்கோ முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com