search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களியக்காவிளை"

    • போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்த ப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் களியக்கா விளை போலீசார் இன்று அதிகாலை மலையடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

    போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை அனுமதி இல்லாமல் கடத்துவதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து செம்மண்ணுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்து செம்மண் அள்ளுவதற்க்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் கைப்பற்றி னர்.

    தப்பி ஓடிய டெம்போ டிரைவர் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் பள்ளியில் இருந்து இவன் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவன், குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளான்.

    அதனை வாங்கி சுனில் மகன் குடித்துள்ளான். சிறிதளவே குடித்த அவனுக்கு இரவில் காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினர். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் சிறுவனின் பெற்றோர், இன்று காலை குறைதீர்க்கும் நாளில், மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு அளித்தனர். அதில், போலீசார் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை.எனவே கலெக்டர் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகன் மருத்துவ செலவிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    • கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    • கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு களியக்காவிளை அருகே பி.பி.எம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது.

    அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது 13 கேன்களில் சுமார் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் மண்ணெண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
    • ளியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் குறுமத்தூர் பகுதியை சார்ந்த பிறசோபன் என்பவருக்கு பணம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று பிறசோபன் வீட்டிற்கு சென்று ராஜேஷ் பணம் திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் 2 பேரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    இதில் 2 பேருக்கும் தலை யில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து பிறசோபன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலும், ராஜேஷ் குழித்துறை ஆஸ்பத்திரியிலும்,சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்கள் கொடுத்த புகாரின்அடிப்படையில் களியக்காவிளை போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர சோதனை
    • பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கை யாக இருந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் குழித்துறை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது காரில் சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி யோடியடிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகி யோர் குளச்சலில் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையத்தை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு. கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்கா விளை வழியாக கேரள மாநி லத்திற்கும் செல்வது வழக்கம்.தவிர நெல்லை மாவட்ட மக்களும் திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்ல நாகர்கோவில், களியக்காவிளை வழித் தடங்களையே பயன்படுத்து கின்றனர்.

    தினமும் சுற்றுலா பயணி களுக்கும், வெளிநாடு பயணிகளுக்கும் இந்த வழித் தடங்கள் பெரிதும் பயன்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது.இதனால் அனைத்து தரப் பினர்களின் போக்குவரத் திற்கும் சாலை எளிதாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிட்டதால் சாலையில் 'பேட்ச்' ஒர்க் செய்யப்பட்டது. 'பேட்ச்' ஒர்க்கும் முழுமையாக செய்யாததால் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட் டுள்ளது. சாலை சரியில்லா ததால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்லும் விமான பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையம் சென்றடைய முடியாமல் அதிருப்தியுடன் செல்கின்றனர்.

    சாலையை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர் சாலைப்பணி முடிந்து 1 வருடத்திற்குள் சேதம டைந்தால் ஒப்பந்தக்காரரே பொறுப்பு ஆவார் என்பது ஓப்பந்த சரத்தில் உள்ளது.ஆனால் இந்த சரத்தை ஓப்பந்தக்காரர்கள் மீறி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளா மல் உள்ளனர்.

    குமரி மாவட்டத் தில் 4 வழிச்சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள் ளது. 4 வழிச்சாலை பணி யை பா.ஜ.க்காரர்களே தடுத்து நிறுத்தி உள்ளனர்.நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஒவ் வொரு கிராமத்திற்கும் பாரபட்சமாக வழங்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.நிலம் அளித்தவர்க்கு அரசு வேலையும் வழங்க வேண் டும்.

    எனவே தேசிய நெடுஞ் சாலையை உடனே செப்ப னிடவும், கிடப்பில் போட் டுள்ள 4 வழிச்சாலை பணிகளையும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் தோட்டியோடு சந்திப்பில் மாபெரும் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெய ராஜ், நகர தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வா கிகள் உடனிருந்தனர்.

    • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை
    • அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லை ப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் மற்றும் மானிய மண்ணெண்ணைய் கடத்து வது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதனால் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜக்க பெருமாள் தலைமையில் போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சோதனை சாவடி வழியாக சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொ ண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது.

    இந்த ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து காப்பிக்காடு அரசு நுக ர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படை த்தனர். தப்பியோடிய டிரைவர் யார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • உரிமையாளர் மீது வழக்கு பதிவு
    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தேவிநகர் பகுதியில் அனுமதி இல்லாமல் பெரிய பாறைகளை உடைத்து சிலர் கடத்துவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கும ரன் தலைமை யில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இல்லாமல் நவீன எந்திரம் மூலம் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தின் உரிமையாளர் போலீசாரை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் உரிமையாளரான குழித்துறையை சேர்ந்த சார்லஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் அனுமதியின்றி பெரிய பெரிய பாறாம்கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் கல் உடைக்கும் வாகனம் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தை பயன்படுத்தியதாக மடிச்சல் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் மணிகண்டன் மீது வழக்குமப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவர் பொன். ஆசை தம்பி
    • தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக செப்பனிட ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் குழித் துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை அமைக்காமல் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கபடுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து அவர்கள் திடீரென அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபர ப்பும் பதட்டமும் நிலவி யது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் திடீரென பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் அங்கு வந்த குழித்துறை நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணி தொடங்கிய நிலையில் தனக்கு தகவல் தரவில்லை என்றும் சேதமடைந்த பகுதியை மட்டும் சரி செய்து விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை செப்பனிடும் பணியை தடுத்து அதிகாரிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் முறையாக தரமாக சாலை போட வேண்டுமென்றும், சாலை முறையாக உடைத்து சீரமைக்க வேண்டும் என்றும், மேலோட்டமாக சாலையை செப்பனிட கூடாது எனவும், இரவு நேரங்களில் சாலை போட கூடாது எனவும் அவர் கூறினார்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை செப்பனிடவும், சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளும் முறையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி போராட்டத்தை கை விட்டார்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த த்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வரு கிறோம்.

    அடுத்து உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றனர். ஆனால் பொதுமக்கள் இதில் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோ ரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் மீது டெம்போ ஏறியது
    • விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் களிய க்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவரது மகன் தீபக் (வயது19). இவர் களியக்கா விளை அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தீபக் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இன்று காலையும் அவர் வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்ப ட்டுச் சென்றார்.களியக்கா விளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்து உள்ளது. அதனை ஒட்டி வந்த தீபக் சாலையில் தவறி விழுந்தார்.அப்போது அங்கு வந்த டெம்போ எதிர்பாராதவிதமாக மாணவர் தீபக் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் களியக்கா விளை போலீஸ் நிலை யத்திற்கு தகவல் கொடுத்த னர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக குழித்துறை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் மீது மோதிய டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்து களியக்காவிளை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தினார்
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் சிங். இவரது வீட்டின் அருகில் வயதான தம்பதியர் வசித்து வருகின்றனர்.

    நேற்று அந்த தம்பதியர் வீட்டுக்கு இரு சக்கர வாகன த்தில் மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் முதிய தம்ப தியரிடம் லோன் வாங்கி தரு வதாக கூறி உள்ளார்.மேலும் அதற்கு முதலில் முன் பணம் கட்ட வேண்டும் என்றும் அந்த நபர் கூறி உள்ளார்.

    ஆனால் முதிய தம்பதி யினர் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனால் அந்த நபர் முதிய தம்பதியிடம் பணம் பறிக்க முயன்று உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்ச லிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து வாலிபர் அங்கி ருந்து ஒட்டம் பிடித்தார்.

    இதற்கிடையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜோயல் சிங் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ரசல் ராஜ் ஆலய பங்கு தந்தை உள்ளிட்டோர் வாலிபரை துரத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோயல் சிங்கை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயம் அடைந்த ஜோயல் சிங் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளையும் கைப்பற்றி பார்த்தனர்.

    இதில் தப்பி ஒடிய வாலிபர் கேரள மாநிலம் காஞ்சிராங்குளம் பகுதியை சேர்ந்த சிபு நாயர் என தெரிய வந்தது. அவர் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×