என் மலர்
உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே அனுமதியின்றி பாறாங்கல் உடைத்தவர் கைது
- போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்
- வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் அனுமதியின்றி பெரிய பெரிய பாறாம்கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து களியக்காவிளை இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் மடிச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் கல் உடைக்கும் வாகனம் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வாகனத்தை பயன்படுத்தியதாக மடிச்சல் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் மணிகண்டன் மீது வழக்குமப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






