என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • போலீசார் தீவிர சோதனை
    • பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கை யாக இருந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் குழித்துறை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி சொகுசு கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்த போது காரில் சுமார் 1 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்க பட்டது. இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்த கடத்தல் காரையும் ரேசன் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர். மேலும் தப்பி யோடியடிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×