என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறைகள்"

    • உரிமையாளர் மீது வழக்கு பதிவு
    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தேவிநகர் பகுதியில் அனுமதி இல்லாமல் பெரிய பாறைகளை உடைத்து சிலர் கடத்துவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கும ரன் தலைமை யில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இல்லாமல் நவீன எந்திரம் மூலம் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தின் உரிமையாளர் போலீசாரை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் உரிமையாளரான குழித்துறையை சேர்ந்த சார்லஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • பெரிய பெரிய பாறைகளை உடைத்து சிலர் வாகனத்தில் கடத்துவது தெரிய வந்தது.
    • போலீசாரை பார்த்ததும் சமூக விரோதிகள் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பாறைகளை உடைத்து கடத்துவதும், செம்மண் கடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்யவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் களியக்காவிளை போலீசார் குழித்துறை அருகே பழவார் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெரிய பெரிய பாறைகளை உடைத்து சிலர் வாகனத்தில் கடத்துவது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து பாறைகள் உடைக்க பயன் படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் சென்ற போது அங்கும் சில சமூக விரோதிகள் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    போலீசாரை பார்த்ததும் சமூக விரோதிகள் பாறை உடைக்க பயன்படுத்திய வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 2 வாகனங்களையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று வாகனங்கள் மீதும் கைது செய்த டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து டிரைவரை சிறையில் அடைத்தனர்.

    ×