என் மலர்
உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே அனுமதியின்றி பாறைகள் உடைக்க பயன்படுத்திய எந்திரம் பறிமுதல்
- உரிமையாளர் மீது வழக்கு பதிவு
- களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து.
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே தேவிநகர் பகுதியில் அனுமதி இல்லாமல் பெரிய பாறைகளை உடைத்து சிலர் கடத்துவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கும ரன் தலைமை யில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இல்லாமல் நவீன எந்திரம் மூலம் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தின் உரிமையாளர் போலீசாரை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் உரிமையாளரான குழித்துறையை சேர்ந்த சார்லஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story






