search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக அரசு"

    • கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் என 5 திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்து, அமல்படுத்தியுள்ளது.

    இதில் கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி. தினேஷ் கூலிகவுடா சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமையவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி நீங்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவின் போதும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நீங்கள் ரூ.2 ஆயிரம் வழங்கினீர்கள். எனவே கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
    • கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல்.

    தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.

    நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைத்தது.

    இந்நிலையில், கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக அம்மாநில கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," தமிழகத்திற்கு தற்போத கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை. கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது" என்று கூறியுள்ளார்.

    தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன.
    • கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது. இருப்பினும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

    இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன. ஆனாலும் மீண்டும் விவசாயிகள் நெற்பயிரிட்டு உள்ளனர்.

    இந்நிலையில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து விமானடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருச்சி:

    காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்,

    தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

    இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • மாநகராட்சி சார்பில் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை.
    • பெங்களூருவில் உள்ள பொது கழிவறைகளை மாநகராட்சி நிர்வகிக்க தவறிவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் வசதிக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெங்களூரு மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. ஆனால் பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறி தனியார் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த வழக்கு விசாரணையின்போது, பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தவும், அதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி சார்பில் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.

    நீதிபதிகள் பிரசன்னா, கிருஷ்ணா எஸ் தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் கூறுகையில், பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வகிக்க தவறிவிட்டது. இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

    மேலும் பெங்களூரு போன்ற பெருநகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு பொது கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி தவறிவிட்டது. மேலும் பொது கழிப்பறை விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.
    • கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவேரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, 192 டி.எம்.சி. அடி நீராக இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 177.25 டி.எம்.சி. அடி அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுப்பது உபரி நீரைத்தான் தர முடியும், உரிய நீரை தரமுடியாது என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது.

    கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்கமுடியாது என்று கூறுவதும், மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வராது என்று கூறுவதும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான செயல். இப்பொழுதே தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

    கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தருவதற்காக அல்ல. எனவே, மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சினை வராது என்று க ர்நாடக முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கர்நாடக அரசின் செயல்பாடுகள் அனைத்துமே நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் செயலாகும்.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மத்திய அரசின் மூலமாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் மேலிடம் மூலமாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
    • காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்த தண்ணீரையாவது குறையாமல் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு அளிக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் வாடும் நெற்பயிர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு நீரின் அளவை குறைக்காமல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிறகு, காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. வயல்கள் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. தற்பொழுது அறிவித்துள்ள தண்ணீர் போதுமானதாக இல்லை. இருந்த பொழுதும் தமிழக விவசாய நிலங்களின் நிலையறிந்து, இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்த தண்ணீரையாவது குறையாமல் கர்நாடக அரசு மனிதாபிமானத்தோடு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.
    • தொடர் போராட்டத்தால் 4 ரெயில் நிலையம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. அடுத்து 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி தொடங்க முடியாத நிலை உள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.

    உரிய நீரை வழங்க கோரியும், கர்நாடக மற்றும் காவிரி நீர் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், சீர்காழி, நாகை ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக உரிய நீரை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்கக்கூடாது.

    மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறும் கர்நாடகா மற்றும் உரிய நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியவாறே ரெயிலை மறித்து போராட்டம் நடத்துவதற்காக தஞ்சை ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் பேரிகார்டு கொண்டு தடுத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ரெயிலை மறிக்க முயன்றதாக காவிரி விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருவாரூரில் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நின்று மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் ரெயில்வே போலீசார், திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகளை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

    இதேபோல் சீர்காழி, நாகையிலும் போராட்டம் நடந்தது. தொடர் போராட்டத்தால் 4 ரெயில் நிலையம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
    • கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலையில் நடைபெற உள்ளது.

    மத்திய மந்திரியை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), ஜி.கே.வாசன் (த.மா.கா.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஏ.கே.பி.சின்னராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    அமைச்சர் துரை முருகனும் இன்று காலையில் டெல்லி சென்றார்.

    மத்திய மந்திரியை சந்திக்கும் போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.

    • பல காரணங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.
    • கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விடாததற்கு  உண்மைக்கு புறம்பாக பல காரணங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

    அதன்படி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் அமைச்சர் துரைமுருகன் நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கி மனு கொடுப்பதுடன் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்க உள்ளனர்.

    • இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.
    • தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.

    மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்கள்.

    தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    ×