search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நூற்றாண்டு விழா"

    • மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும், கட்சி சார்பிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தி.மு.க.வின் பல்வேறு அணிகள் மற்றும் அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.

    இதையொட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி பிரமாண்டமான மகளிர் மாநாடு மற்றும் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கருணாநிதி செய்த சாதனைகள், கொண்டு வந்த திட்டங்களை பற்றி எடுத்துரைத்து கருணாநிதிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மகளிர் மாநாட்டில் பங்கேற்க அகில இந்திய அளவில் பெண்களுக்காக பாடுபடுபவர்கள், பெண் தலைவர்கள் ஆகியோரை அழைத்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைத்துள்ளார். அவர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் எம்.பி. உள்ளிட்ட பிரபலங்களை கனிமொழி எம்.பி. நேரில் சென்று சந்தித்து அழைத்து வருகிறார்.

    இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று நிகழ்ச்சிகள் பற்றி விளக்குகிறார்.

    • ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
    • எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

    அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.

    மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.

    இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • தங்கை கனிமொழி முன்னெடுக்கும் “கலைஞர் 100”-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
    • செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் "கலைஞர் 100"-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஜூன் 3-ந்தேதி கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவு.

    சென்னை :

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும்.
    • சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக தி.மு.க. தலைமை கழகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணியினரும் எத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும் என்று தலைமை கழகம் வரையறுத்துள்ளது.

    அதற்கான பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் தற்போது வெளியிட்டு உள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 5-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியினருக்கும் தி.மு.க. தலைமை கழகம் அளித்துள்ள நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. இளைஞரணியினர் மாவட்ட வாரியாக பேச்சு போட்டி நடத்தி மாநில அளவில் 100 பேச்சாளர்களை கண்டறிந்து அவர்களை மாநில சொற்பொழிவாளர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாரத்தான் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைதளங்களில் கருணாநிதி பற்றி ரீல்ஸ்களை பதிவிட வேண்டும். யூடியூப்பில் கருணாநிதி வாழ்க்கை சாதனைகளை விளக்கும் காணொலிகளை பதிவிட வேண்டும்.

    மாணவர் அணியினர் சார்பில் மீண்டும் மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் பேச்சு போட்டி நடத்த வேண்டும். மகளிர் அணி சார்பில் அகில இந்திய அளவில் பெண் தலைவர்களின் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும்.

    மருத்துவ அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். இலக்கிய அணி சார்பில் கருணாநிதியின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் கல்வியாளர்கள் பங்கேற்கும் சொல்லரங்கமும் நடத்தப்பட வேண்டும்.

    கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டம் தோறும் காட்சிப்படுத்த வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக கலைஞர் சுடர் தொடர் ஓட்டம் நடத்த வேண்டும்.

    சட்டத்துறை சார்பில் பேச்சு போட்டி நடத்த வேண்டும். பொறியாளர் அணி சார்பில் கல்லூரிகளில் கவியரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    வர்த்தகர் அணி சார்பில் தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் கருணாநிதி சாதனைகளை விளக்கும் கலைஇரவு நடத்த வேண்டும். தொண்டர் அணி சார்பில் சினிமா நடிகர்-நடிகைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் அணி சார்பில் 1000 இடங்களில் மரம் நட வேண்டும்.

    நெசவாளர் அணி சார்பில் கண்காட்சி நடத்த வேண்டும். மீனவர் அணி சார்பில் கடலோர பகுதிகளில் குறைதீர்க்கும் முகாம் நடத்தவேண்டும். ஆதிதிராவிடர் பிரிவு சார்பில் சமநீதி கோட்பாடுகளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மாவட்ட செயலாளர்கள் மூலம் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அனைத்து ஊர்களிலும் கொடி கம்பம் நிறுவ வேண்டும். மேலும் 234 சட்டசபை தொகுதி வாரியாக 234 இடங்களில் கருணாநிதிக்கு முழு உருவ சிலைகள் வைக்க இடங்களையும், தேதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

    • திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். இதில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சரவண குமார், மாநில தொழிலாளர் நல செயலாளர் ரவிந்திரன், மதுரை மண்டல செயலா ளர் ராஜேஷ் கண்ணன், பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், வட்டச் செயலாளர் சோமு, மாநிலத் துணைத் தலைவர் இராமு, திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மற்றும் கோட்டம், உப கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் சங்கபொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது.
    • இந்த மாரத்தான் போட்டி 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டி 42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73, 206 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியின் 42 கிமீ பிரிவு இன்று அதிகாலை 4 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73 ஆயிரத்து 206 பேர் முன் பதிவு செய்துள்ளார்கள்.
    • அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டுக்கான கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 737 பேர் ஓடினார்கள். இது ஆசிய சாதனையாக பதிவானது. இதில் கிடைத்த ரூ.1 கோடியே 22 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் சுமார் 5 கோடி செலவில் எழும்பூர் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்படுகிறது.

    இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியாக நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிறு) நடைபெறும் மாரத்தான் 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

    42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73 ஆயிரத்து 206 பேர் முன் பதிவு செய்துள்ளார்கள். இது கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும்.

    42 கி.மீ. மற்றும் 21 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். 10 கி.மீ. பிரிவில் தலா ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ. 15 ஆயிரமும், 5 கி.மீ. பிரிவில் ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

    கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது.

    வழிநெடுக 14 இசைக்குழுக்கள் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும். 17 இடங்களில் குடிநீர், ஊக்கப் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால் இந்த போட்டியை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னெடுத்து செய்வதில் பெருமை கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
    • தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    சென்னை :

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் கடந்த 24-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 885 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டுள்ளனர்.

    இந்த மருத்துவ முகாமில் 35 ஆயிரத்து 138 பேர் சித்தா மற்றும் இந்திய மருத்துவத்திற்காக பதிவு செய்து பரிசோதனை செய்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மருத்துவ துறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பரிசோதித்து நோய் கண்டறியப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

    * மருத்துவ முகாமில் வினியோகிக்கப்பட்ட மருந்துகளின் செலவு தொகை ரூ.42 லட்சத்து 31 ஆயிரத்து 404 ஆகும்.

    * நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்காக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 48 பேர் பரிசோதித்து கொண்டனர்.

    * நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று 14 ஆயிரத்து 471 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 4 ஆயிரத்து 56 நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 19 ஆயிரத்து 217 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் 5 ஆயிரத்து 576 ரத்த அழுத்த நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

    * நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று 8 ஆயிரத்து 333 பேர் பதிவு செய்து பரிசோதித்து கொண்டனர். மேலும் பரிசோதனையில் இந்த 2 நோய்களினாலும் 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    * கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 7 ஆயிரத்து 849 பேர் மேற்கொண்டனர். இதில் 762 பேருக்கு கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை 8 ஆயிரத்து 712 பேர் மேற்கொண்டனர். இதில் 1,176 பேருக்கு மார்பக புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டது.

    * ரத்த சோகை கண்டறியும் பரிசோதனையை 44 ஆயிரத்து 165 பேர் செய்துகொண்டனர். இதில் 5 ஆயிரத்து 492 பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்தது.

    * சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 553 பேர் செய்து கொண்டனர். இதில் 785 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனையை 28 ஆயிரத்து 658 பேர் மேற்கொண்டனர். இதில் 1,299 பேருக்கு ரத்த கொழுப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

    * 12 ஆயிரத்து 817 பேர் காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர். சளி பரிசோதனைக்கான 4 ஆயிரத்து 366 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 289 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 12 ஆயிரத்து 591 பேர் தொழுநோய் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 133 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேல் பரிசோதனையில் 14 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

    * கொரோனா பரிசோதனை 936 பேர் செய்து கொண்டனர்.

    * பல் பரிசோதனையை 13 ஆயிரத்து 685 பேர் மேற்கொண்டனர். இதில் 1,565 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * இ.சி.ஜி. பரிசோதனையை 14 ஆயிரத்து 894 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 1,238 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * 'எக்கோ' பரிசோதனையை 7 ஆயிரத்து 20 பேர் எடுத்துக் கொண்டனர். இதில் 715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    * முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 13 ஆயிரத்து 125 பேர் பதிவு செய்து கொண்டனர்.

    * தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் மூலம் பரிசோதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 852 பேர் கண் கண்ணாடி பெற்றனர்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

    • மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர்.
    • முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் நடந்தது.

    சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாம்களில் காலையிலேயே பெருமளவில் மக்கள் திரண்டனர். பலர் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்திருந்தார்கள்.

    முகாம்களில் பொதுமருத்துவம், பொதுவான மருத்துவ ஆலோசனைகள், ரத்தத்தில் கொழுப்புச்சத்து, முழு ரத்த பரிசோதனை, மார்பக பரிசோதனை, காசநோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, பல், கண், குழந்தை பேறு உள்ளிட்ட அனைத்து விதமான நோய்கள் கண்டறிதல், தேவைப்படுபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்தால் ஆயிரக்கணக்கில் செலவாகும் என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார்கள்.

    மருத்துவ முகாம் பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முதலில் தொடங்கியவர் கலைஞர். அவர் வாழும் காலம் வரை இந்த துறைக்காக ஏராளமான திட்டங்களையும் பெருமளவு நிதியையும் ஒதுக்கினார்.

    எனவே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது சிறப்புக்குரியது.

    முன்பெல்லாம் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற அரசு ஆஸ்பத்திரிகளை தேடி செல்ல வேண்டும். ஆனால் தளபதி ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது.

    இன்று நடந்து வரும் முகாமிலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு முகாமிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்கிய 1 லட்சத்து 672 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளார்கள். விபத்துகளினால் ஏற்படும் இறப்பும் குறைந்து இருக்கிறது என்றார்.

    பின்னர் அவரிடம் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கிளப்புவது பற்றியும் வெளிப்படை தன்மையாக நடக்கவில்லை என்றும் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, வெளிப்படை தன்மை என்றால் நேரு ஸ்டேடியத்தில் ஆயிரம் பேரை கூட்டி வந்து டேபிள் போட்டு அதில் வைத்தா ஆபரேஷன் செய்வார்கள்? சந்தேகம் கிளப்புபவர்களை இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொல்லுங்கள். அப்போதுதான் தெரியும் என்றார் கோபமாக.

    ×