search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைவிதை"

    • ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
    • எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

    அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.

    மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.

    இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடந்தது.
    • விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 1-லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பனைமரத்தில் விளையும் பொருட்களால் ஆன கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நுங்கு, பண ஓலையினால் செய்யப்பட்ட கொழுக்கட்டை, என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருட்கள் அனைத்துதரப்பினைரையும் கவர்ந்தது.

    இந்த நிகழ்வில் வட்ட வளர்ச்சி அலுவலர் தங்கவேல் குளத்தூர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, மாவட்ட குழு உறுப்பினர் மிக்கேல், நவமணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன், ராஜேந்திரன், ராஜ் மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, ஒன்றிய அவைத் தலைவர் கெங்கு மணி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை இளையான்குடி கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர் மாலிக் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு வைத்தனர். தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார். சமூக சேவைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வாழ்த்தினார்.

    ×