பனைவிதை நடும் விழா

இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.
பனைவிதை நடும் விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை இளையான்குடி கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர் மாலிக் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு வைத்தனர். தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார். சமூக சேவைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வாழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com