search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம்"

    • புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று இரவு பள்ளம் தோண்டினர்.
    • அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    கடலூா்: 

    கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று இரவு பள்ளம் தோண்டினர். இந்த மைதானத்தில் இன்று காலை வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொள்ள அப்பகுதியினர் வந்தபோது பள்ளம் தோண்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் அறிந்து அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பள்ளம் தோண்டும் பணியினை தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். புதிய கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டுவதாக ஜே.சி.பி. எந்திர டிரைவர் கூறினார். அப்போது அங்கிருந்த முன்னாள் மாணவர்கள், இந்த பள்ளி வளாகத்தில் ஏராளமான இடம் உள்ளது. புதிய கட்டிடத்தை அங்கே கட்டாமல், விளையாட்டு மைதானத்தில் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டனர். மேலும், திட்டக்குடி நகரப்பகுதியில் உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இது மட்டும்தான். இதிலும் கட்டிடம் வந்தால், மாணவர்கள் எங்கு சென்று விளையாடுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். 

    மாணவர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், இது போன்ற நடவடிக்கைகள் தவறாகும் என்று கூறினார்கள். இது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அதுவரை பணிகளை மேற்கொள்ளக் கூடாதன ஒப்பந்ததாரரிடம் போலீசார் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிகுட்பட்ட கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலை வில் அனுமதி இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.

    இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அடுக்குமாடி கட்டிடம், வாடகை குடியிருப்பு கட்டு வதாக நகராட்சி நிர்வாகத் திற்கு புகார் வந்தது. இதை யடுத்து நகராட்சி கமிஷனர் செல்வராஜ், கீழக்கரையில் உள்ள அனைத்து கட்டி டங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கீழக்கரை நகர் அமைப்பு ஆய்வாளர் வனிதா, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வாடகை குடியிருப்பு, அடுக்குமாடி கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது சாலை தெருவில் கடற்கரை யில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அதிக உயரமான வாடகை குடி யிருப்பு கட்டிடங்கள் கட்டி யது தெரியவந்தது.

    மீண்டும் இந்த கட்டி டத்தின் வரை படங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரி மாவட்ட நகர் ஊர் அமைப்பு துணை இயக்குனர் அலுவ லகத்திற்கு நகராட்சி மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி கமிஷனர் கூறியதாவது:-

    கீழக்கரை பகுதியில் புதிய கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், வாடகை குடியிருப்புகள் முறையாக அனுமதி பெற்று கட்ட வேண்டும். மேலும் வாசல் படிகளை உரிமை யாளர்கள் இடத்திற்குள் அமைத்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டிடங்கள் அகற்றப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.
    • ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சியில், 2021-22-ம் ஆண்டிற்கான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் முத்துபிள்ளை மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், ஒன்றிய தலைவர் அபிராமி சுந்தரம், துணை செயலாளர்கள் யேசுதாஸ், நேரு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் ராஜேந்திரன், உதயம் கோவிந்தராஜன், இஸ்ரேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முரளி, மார்க்கெட் சங்கர், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, ஆனந்தராஜ், உதவி பொறியாளர் அய்யப்பன், ஊராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை வீடுகளுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வல்ளூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, 56 நரிக்குறவ பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 215 பயனாளிகளுக்கு இணைய வழிபட்டா, 200 பயனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 668 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 41 ஆயிரத்து 251 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

    முன்னதாக, வள்ளூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர அங்காடி கட்டிடத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை அப்பகுதியிலுள்ள வீடு களுக்கே சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 21-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்குகிறார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினர்களாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கு வருபவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்கிறார். முடிவில் பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறுகிறார். விழாவில் சங்கத்தின் பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார் ராமசாமி, இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.
    • 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட கான்கிரீட் வீட்டை இடிக்காமல் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.

    இதுகுறித்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொன்லிங்கம் கூறும்போது, 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது. பின்னர் 60 ரோலர்கள் உதவியோடு கட்டிடம் நகர்த்தப்பட்டது. ஒரு நாளுக்கு 8 அடி தூரம் என 3 நாட்களில் 24 அடி தூரம் நகர்த்தப்படும். இதுவரை 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்டிடத்துக்கு எந்தவித சேதரமும் ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 5 மாடி உயர கட்டிடம் வரை நகர்த்தவும், உயர்த்தவும் முடியும் என்றார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.
    • பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தஞ்சாவூர்:

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் சந்தைப்படுத்தும் பொருட்டு பல்வேறு வகையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 28மாவட்டங்களில் மாவட்ட அளவிலான வணிக வளாகம், பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் தலா ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.

    இவ்வளாகங்களில் கடைகள், கூட்ட அரங்குகள், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை ரெயிலடி அருகில் மாவட்ட அளவிலாள வணிக வளாகம் (பூமாலை வணிக வளாகம்) ரூ.28 லட்சம் செலவில் கட்டப்பட்டு இயங்கி வந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டபேரவையில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில் மாவட்டங்களில் உள்ள பூமாலை வணிக வளாகங்கள் ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி பூமாலை வணிக வளாகத்தினை சிறப்பான முறையில் மேம்படுத்தி பொதுமக்களை கவரும் வகையில் தரம் உயர்த்தி பழுது பார்த்தல், உள்கட்டமைப்பு மேம்படுத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற திட்டப்பணிகளை ரூ.51.41 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு இன்று காலை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பயன்பாட்டிற்கு வழங்குவதற்காக காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து பூ மாலை வணிக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    பின்னர் பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 அடுக்குமாடி கட்டிடம் பக்கத்தில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது.
    • கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையை விட தாழ்வான நிலைக்கு மாறின.

    இதன் காரணமாக மழை பெய்த போது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இந்த நிலையில் அங்குள்ள 3 அடுக்கு மாடி வீட்டை சாலையை விட சற்று மேலே உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

    அதற்காக நவீன ஹைட்ராலிக் எந்திரத்தை வரவழைத்தார்.

    கடந்த சனிக்கிழமை தனது வாடகை வீடுகளில் வசிக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்குமாடி வீட்டை அடித்தளத்தில் இருந்து உயர்த்த உரிமையாளர் முயற்சி செய்தார்.

    அப்போது 3 அடுக்குமாடி கட்டிடம் பக்கத்தில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குத்புலாபூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.அப்போது ஹைட்ராலிக் எந்திரம் மூலம் கட்டிடத்தை தூக்கிய போது வாடகை வீடுகளில் 16 பேர் இருந்தனர் என்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

    இதையடுத்துக் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐதராபாத் மாநகராட்சி உத்தரவிட்டது. இதன் பேரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

    • மேட்டூர் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்திரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
    • ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக் கப்படும் மீன்களை பாது காத்து வைப்பதற்காக, மேட்டூர் மீன்வளத் துறை யின் உதவி இயக்குனர் அலு வலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்தி ரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு உதவி இயக்குனருக்கு புதிதாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இதையடுத்து பழைய ஐஸ் கட்டி உற்பத்தி செய்யப் படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    • மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.
    • இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொட்க்கப்பள்ளி மற்றும் இடையிறுப்பு ஊராட்சி மணப்படுகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதிமேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழுதலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யாராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி மற்றும்மாநிலங்கள் அவை உறுப்பினர் எம்.சண்முகம் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தனர். இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதாகார்த்திகேயன், பேரூராட்சி துணைதலைவர் பொன்னழகு சீனு. வார்டு உறுப்பினர் புனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபேபி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×