search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா சபை"

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    நியூயார்க்:

    பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ரவூப் அசார். இவர் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் ஆவார்.

    தீவிரவாதி அப்துல் ரவூப், 1999-ம் ஆண்டு இந்திய விமான கடத்தல். 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை பயங்கரவாத தடை பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா தனது முன் மொழிவை வைத்தது.

    இதற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்தன.

    இதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிறுத்தியது. இதற்கு முன்பும் பல பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக தீர்மானங்களை சீனா நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன.
    • ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபை, ஐநா புள்ளியியல் ஆணையத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் இந்தியா 46 ஓட்டுக்களை பெற்றுவெற்றி பெற்றது.

    இதன் அடுத்தபடியாக தென்கொரியா 23 ஓட்டுகளும் , சீனா 19 ஓட்டுகளும் , யு.ஏ.இ. 15 ஓட்டுகளும் பெற்றன. தென் கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் இரண்டாவது வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    மீதமுள்ள ஆசிய பசிபிக் மாநிலங்களின் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு செயல்முறை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அர்ஜென்டினா, சியரா லியோன், ஸ்லோவேனியா, உக்ரைன், தான்சானியா ஐக்கிய குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜனவரி 1, 2024 முதல் நான்கு ஆண்டு பதவிக் காலத்திற்கான அங்கீகாரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    இதன்படி ஐநா புள்ளியியல் ஆணையத்திற்கு 4 ஆண்டு காலத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    • உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.
    • இதில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

    நியூயார்க்:

    உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.

    வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன.

    இந்தப் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் நீடிக்கிறது. அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது. தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது.
    • தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிப்பான்கள் விதித்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

    பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    தற்போது அங்கு 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ், ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமீனா முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்களின் செயல்பாட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருவதாக தலிபான்கள் தரப்பில் ஐ.நா. குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அந்நாட்டில் மீண்டும் பெண்கள், சிறுமிகள் படிக்க வாய்ப்பு உருவாகும் என்று கருதப்பட்டது. ஆனால் தலிபான்கள் பெண் உதவி பணியாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர். இது பல முக்கியமான மனிதாபிமான திட்டங்களுக்கு மரண அடி என்று ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறினார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தலிபான்கள் இந்த கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபேரழிவை ஏற்படுத்தும் என்றார்.

    • பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.
    • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் அந்த அமைப்பின் தலைவரும், மும்பை, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

    அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு, காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

    இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது. இதேபோல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல பயங்கரவாதிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ப்பதை சீனா தடுத்து நிறுத்தியது.

    இந்தநிலையில் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி உலக அளாவிய பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளான். இது தொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எல். அல்-கொய்தா தடை குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2016-ன் படி சொத்துகள் முடக்கம், பயண தடை, ஆயுதத் தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. சபை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    இவருக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உண்டு. மேலும் இந்தியாவில் நடந்த செங்கோட்டை தாக்குதல் (2000-ம் ஆண்டு) ராம்பூர் சி.ஆர்.பி.எப். முகாம் தாக்குதல் (2008-ல்), ஸ்ரீநகர் தாக்குதல் (2018) உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக, அப்துல் ரகுமான் மக்கிக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதி மன்றம் சிறை தண்டனை விதித்தது.

    • அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியது.
    • இது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது என்றார் ஐ.நாவின் தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடக்கியது. டுவிட்டரின் புதிய தனியுரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அதேசமயம், எலான் மஸ்க்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கணக்குகளை முடக்கியதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ஐ.நா. மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் கூறுகையில், டுவிட்டரில் பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. ஊடக சுதந்திரம் என்பது பொம்மை அல்ல. சுதந்திரமான பத்திரிகை ஜனநாயக சமூகங்களின் அடித்தளம் ஆகும். மேலும் அது தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய கருவியாகும் என தெரிவித்தார்.

    ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் வேரா ஜூரோவா, டுவிட்டர் நிறுவனம் ஊடக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும். எலான் மஸ்க் அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து எல்லை மீறினால் ஐரோப்பாவின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

    • சீனாவில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியது.

    நியூயார்க்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

    ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாகாணத்தின் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    • குஜராத் சென்ற ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

    தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர், குஜராத் சென்ற ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநில கேவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சந்தித்து பேசினார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, கேவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

    • போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.

    தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.

    இதற்கிடையே, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தனது மூன்று நாள் இந்தியா பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

    மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் குட்டெரெஸ் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ஐநா பொதுசபை கூட்டத்தின் போது டிரம்பை சந்தித்து பேசியதாகவும், பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேட்டியளித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. #UNGA #Pakistan #Trump
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் ஐநா பொது சபை கூட்டம் நடந்து வருகின்றது. கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி சந்தித்து கைகுலுக்கிகொண்டனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என டிரம்ப் கூறியதாக குரேஷி பின்னர் பேட்டியளித்தார். 

    ஆனால், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. “உணவு விருந்தின் போது, குரேஷியுடன், அதிபர் டிரம்ப் கைகளை மட்டுமே குலுக்கினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்று சாதனை படைத்துள்ளது. #UNGA #JacindaArdern
    நியூயார்க்:

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். 

    நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் ஜெசிகா தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் வந்து கலந்துகொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது. 
    ×