search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN assembly"

    ஐநா பொதுசபை கூட்டத்தின் போது டிரம்பை சந்தித்து பேசியதாகவும், பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என கூறியதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேட்டியளித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. #UNGA #Pakistan #Trump
    நியூயார்க்:

    நியூயார்க் நகரில் ஐநா பொது சபை கூட்டம் நடந்து வருகின்றது. கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி சந்தித்து கைகுலுக்கிகொண்டனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம் என டிரம்ப் கூறியதாக குரேஷி பின்னர் பேட்டியளித்தார். 

    ஆனால், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது. “உணவு விருந்தின் போது, குரேஷியுடன், அதிபர் டிரம்ப் கைகளை மட்டுமே குலுக்கினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் 3 மாத கைக்குழந்தை வரலாற்று சாதனை படைத்துள்ளது. #UNGA #JacindaArdern
    நியூயார்க்:

    நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபட் மாதம் பதவியேற்றார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். 

    நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்த ஜெசிந்தா, கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு அடுத்த படியாக பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற பெண் என்ற பெயரை ஜெசிகா பெற்றார்.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐநா பொதுக்கூட்டத்தில் ஜெசிகா தனது 3 மாத கைக்குழந்தை அட்ரென் கேபோர்ட் உடன் வந்து கலந்துகொண்டார். பெண் தலைவர் ஒருவர் ஐநா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதால் ஜெசிந்தா சாதனை படைத்துள்ளார். அவரது குழந்தைக்கு நியூசிலாந்தின் முதல் குழந்தை என ஐநாவின் அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருக்கிறது. 
    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு போட்ட அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Minister #Jayakumar #Sterlite
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் விவகாரத்தை பொறுத்தவரை அந்த நிறுவனம் எந்தநிலையிலும் மீண்டும் திறக்கப்படக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு இருக்கிறது. இதற்கான அரசாணை போடப்பட்டது. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. விசாரணை கமிஷனும் அதற்கான பணியை தொடங்கிவிட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, விசாரணை ஆணையம் அரசுக்கு பதில் அளிக்கும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

    விசாரணை ஆணையம் கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் முழுமையான அளவுக்கு ஜெயலலிதா காலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் விளக்கியிருக்கிறார். பசுமை தீர்ப்பாயம், சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மு.க. ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதில் எங்களுக்கு, மாறுபட்ட கருத்து கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்போம். ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கும், செயல்படுவதற்கும் முழு காரணம் தி.மு.க. ஆட்சி தான். எனவே முழு பாறாங்கல்லை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வும் விழுங்கிவிட்டு ஏப்பம் விடுவது போலத் தான் இருக்கிறது. உண்மை நிலை நாட்டு மக்களுக்கு தெரியும்.

    தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். ஆனால் தூங்குபவர்கள் போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு போட்ட அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும்.

    தமிழகம் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக திகழ்கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படுமா? என்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும். எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சமூகத்துக்கு உகந்த நல்ல பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார். நல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறை எம்.ஜி.ஆரிடம் இருந்தது. இதனால் மக்கள் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தார்கள். அரியணையிலும் அமர வைத்தார்கள். எனவே மக்கள் தான் சினிமா நட்சத்திரங்கள் குறித்து முடிவு செய்வார்கள், நான் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #Minister #Jayakumar #Sterlite
    ×