search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்கள்"

    • விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம்.
    • தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான்களின் உச்ச தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். தலிபான்களின் பணி காபூலை கைப்பற்றியதுடன் முடிவடையவில்லை. அது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.

    • பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின.
    • பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்சியாளர்களின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் ஆப்கானிஸ்தானை சமூக அரசியல் கொள்கை அங்கீகாரத்தில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கி வைத்தன. அதன்மீது பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின. இதன் காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் சக்தியாக அங்கீகரிக்க முடியாது. இருப்பினும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை பெற ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தகுந்த வரைமுறைகளை பின்பற்ற வேண்டும், திறம்பட்ட ஆட்சிக்கு பெண்கள், குடிமக்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்ந்த வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்" என்றார்.

    • பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

    உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, 'பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • 2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர். அவர்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    நேற்று தலிபான்கள், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய 2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறியதாவது:-

    "ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை" என்றார்.

    அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
    • ஆப்கானியர்கள் தங்கள் நாடு, சுதந்திரம், அரசாங்கம் மற்றும் விருப்பத்தை மீண்டும் பெற முடிந்தது என்றார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

    இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி தலிபான்களின் ஆட்சி நடைபெறவில்லை.

    ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை.

    இந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தலிபான்கள் நேற்று (செவ்வாய்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவித்தனர். தலிபான்கள் காபூல் வீதிகளில் ஊர்வலமாக சென்று கைவிடப்பட்ட அமெரிக்க தூதரக கட்டிடத்திற்கு அருகிலுள்ள மசூத் சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள். சிலர் தங்கள் ஆயுதங்களை ஏந்திச் சென்றனர். மற்றவர்கள் கீதங்கள் முழங்க, இளம் சிறுவர்கள் இஸ்லாமிய நம்பிக்கைப் பிரகடனம் பொறிக்கப்பட்ட இயக்கத்தின் வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றனர்.

    இதுகுறித்து தலிபான்கள் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதற்கு வழி வகுக்கும் இந்த வெற்றி பாராட்டுக்குறியது. காபூலைக் கைப்பற்றியதன் மூலம், பெருமைமிக்க தேசமான ஆப்கானிஸ்தானை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்படுள்ளது. எந்தவொரு ஆக்கிரமிப்பாளரும் எங்கள் நாட்டின் சுதந்திரத்தை அச்சுறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறியுள்ளது.

    மேலும் இதுகுறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறும்போது, இந்த நாள் ஆப்கானியர்களுக்கு மரியாதையும் பெருமையும் நிறைந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆப்கானியர்கள் தங்கள் நாடு, சுதந்திரம், அரசாங்கம் மற்றும் விருப்பத்தை மீண்டும் பெற முடிந்தது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.
    • மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.

    இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது அங்குள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
    • ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

    அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட் ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது. இதில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.

    • தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
    • சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.அவர்களை அங்கீகரிக்காதவரை பெண்களுக்கான கல்வி உரிமை, மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சர்வதேச அமைப்புகளுக்குள் தலிபான்களை கொண்டு வந்தால் தான் கேள்வி எழுப்ப முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    • தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது.
    • தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிப்பான்கள் விதித்தனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அப்போதில் இருந்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக தலிபான் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

    பெண்கள் பள்ளி, கல்லூரி செல்லக்கூடாது, பணிக்கு செல்லக்கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் வரையில் புர்கா அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    தற்போது அங்கு 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ், ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமீனா முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்களின் செயல்பாட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருவதாக தலிபான்கள் தரப்பில் ஐ.நா. குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அந்நாட்டில் மீண்டும் பெண்கள், சிறுமிகள் படிக்க வாய்ப்பு உருவாகும் என்று கருதப்பட்டது. ஆனால் தலிபான்கள் பெண் உதவி பணியாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர். இது பல முக்கியமான மனிதாபிமான திட்டங்களுக்கு மரண அடி என்று ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறினார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தலிபான்கள் இந்த கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் இதுபேரழிவை ஏற்படுத்தும் என்றார்.

    • ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்தது. பல்கலைக்கழகங்களில் பாலினக் கலப்பைத் தடுக்க இந்த தடை அவசியம் என்று தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் நிடா முகமது நாதிம் வாதிட்டார். மேலும் சில பாடங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, அவை சரிசெய்யப்பட்டவுடன் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மூத்த ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர். எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    ஆனால் தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான தடையை மேலும் வலுப்படுத்தியது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக கூறி உள்ளது. பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாவுல்லா ஹஷ்மி இன்று கூறியிருக்கிறார். 

    இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் இந்த உத்தரவை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சில மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்தது. பிற இடங்களில் பிப்ரவரி 27-ல் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவால் கலக்கமடைந்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
    • ஆப்கானிஸ்தானில் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது.

    பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.

    இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.

    ×