search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி- 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களை அனுப்புகிறது
    X

    ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி- 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களை அனுப்புகிறது

    • உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.
    • ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

    அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.

    இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட் ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.

    இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது. இதில் 2,500 மெட்ரிக் டன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அரசாங்கத்தை உலக நாடுகள் போல் இந்தியாவும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா உதவி வருகிறது.

    Next Story
    ×