search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பாடு"

    • திருத்தளி நாதர் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனுறை திருத்தளிநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த

    24-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், பிரியா விடை அம்மன், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்தனர்.

    5-ம் திருநாளான்று திருத்தளிநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ெதாடர்ந்து 9-ம் நாளில் தேரோட்டம் நடந்தது. முதல் தேரில் விநாயகரும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதரும், 3-வது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் 10-ம் நாளான நேற்று இரவு கோவில் சீதளி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமி அம்பாளுடன் தெப்ப மண்டபம் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- சிவகாமி அம்பாள் எழுந்தருளினர். வான வேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை வலம் வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கார்காத்த வெள்ளாளர் உறவின்முறையினர் செய்திருந்தனர்.

    • கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின்னர் அழகர்மலைக்கு திரும்பும் நாளில் இந்த கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விைள பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    அங்குள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.

    தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பு நடந்தது.
    • மாவட்ட பா.ஜ.க தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரேடியோவில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதன் 100-வது பகுதியான நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரிய திரை மூலம் பிரதமரின் உரையை தமிழாக்கம் செய்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

    மாநில கலை கலாச்சார பிரிவு செயலாளர் தாரணி ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பவர் நாகேந்திரன், ரமேஷ்பாபு, நிகழ்ச்சி பொறுப்பாளர்- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமவீரபாகு, 'மனதின் குரல்' ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் தி.மு.க மாநில மருத்துவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்

    அவர்களை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.
    • பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வெங்கடேஷ் தாக்கல் செய்தார்.

    முன்னதாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது:-

    தமிழகத்திலேயே தஞ்சை மாநகராட்சி முதல் முறையாக அனைத்து கடன்களையும் அரசுக்கு திரும்ப செலுத்தி கடனில்லா மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பெறப்பட்ட கடன் தொகைக்கு தவணை திரும்ப செலுத்தும் விதமாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2.72 கோடி திரும்ப செலுத்தப்பட்டது.

    நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்வதை தவிர்த்து, அரசின் முழு மானியத்துடன் பெறப்படும் திட்டங்களின் கீழ் பணியை மேற்கொள்ள முன்மொழிவுகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அரசு வழிகாட்டு தலின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்கு தொகை மற்றும் அரசு மானியம் சேர்த்து மாநிலத்திலேயே அதிக அளவில் 2022-23-ம் ஆண்டு ரூ.7.96 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    வருகிற 2023-24-ம் நிதியாண்டில் ரூ.9.94 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    நடப்பு நிதியாண்டுக்கு (2023-24) ரூ.4.41 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதில், ரூ.284.70 கோடிக்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, ரூ.280.28 கோடிக்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பள்ளியில் இறுதி ஆண்டு பள்ளி கல்வி முடித்துள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத விருப்பமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்க மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • 200-க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் 2 கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார்.பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்றார்.

    கூட்டத்தில் பள்ளியில் ஆண்டு விழா நடத்துவது, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குழுக்கள் அமைத்து அதன் மூலம் ஏற்பாடு செய்வது, விளையாட்டு மன்றம் இலக்கிய மன்ற போட்டிகள் நடத்துவது, 200 -க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது.

    எனவே பள்ளி குழந்தைகளின் தேவையை கொண்டு கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜவகர் நிஷா முகமது ரபிக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் அகல்யா நன்றி கூறினார்.

    • பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்ற ஆசிப்பிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, 2-ம் பரிசை வென்ற முகம்மது யூசுப்பிற்கு பஞ்சாயத்து துணை தலைவர் புரோஸ் கான், 3-ம் பரிசை வென்ற கைப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பஹது ராஜா ஆகியோர் காசோலை வழங்கினர்.

    ஒன்றிய பற்றாளர் லதா, கவுன்சிலர்கள் மீராசா, அயூப் கான், பீர் முஹைதீன், ரஜப் நிஷா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெற உதவிய அக்பர் அம்பலம், செய்யது இபுராமுசா, ரஜபுல்லாஹ் பெரியபட்டினம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    • திருப்பத்தூர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நின்ற நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சியைத் தொடர்ந்து உற்சவரான நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    அதன் வழியாக சுவாமி வலம் வந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தது. சுவாமியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெருமாள் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    • சேலம் மேற்கு அஞ்–சல் கோட்டத்தில ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது.
    • இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    சேலம்:

    சேலம் மேற்கு அஞ்–சல் கோட்ட கண்–கா–ணிப்–பா–ளர் அலு–வ–ல–கம் வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    நேரில் சென்று ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் படும் சிர–மங்–களை தவிர்க்–கும் வகை–யில் அஞ்–சல் துறை–யின் கீழ் செயல்–படும் இந்–தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது. இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆதார் எண், செல்–போன் எண், பி.பி.ஓ. எண் மற்–றும் ஓய்–வூ–திய கணக்கு விவ–ரங்–களை தெரி–வித்து, கைவி–ரல் ரேகை பதிவு செய்–தால், ஒரு சில நிமி–டங்–களில் டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழை சமர்–பிக்க முடி–யும்.

    இந்த டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சேவையை பெற விரும்–பும் ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் அரு–கில் உள்ள அஞ்–ச–ல–கம் அல்–லது தங்–க–ளது பகுதி தபால்–கா–ரரை தொடர்பு கொள்–ள–லாம். மத்–திய அரசு ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் மட்–டு–மின்றி தொழி–லா–ளர் வருங்–கால வைப்பு நிதி நிறு–வ–னம் மூலம் ஓய்–வூ–தி–யம் பெறு–ப–வர்–களும், இந்த வச–தியை பயன்–ப–டுத்தி வீட்–டில் இருந்–த–ப–டியே தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆயுள் சான்–றி–தழை சமர்ப்–பித்து பயன்–பெ–ற–லாம்.

    இவ்–வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.

    • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள் ளது.

    இந்த கோவிலில் நாளை புத்தாண்டு தரிச னத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதன்பிறகு 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது.

    அதன் பிறகு 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. பின்னர் 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றன.
    • முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், விழிதியூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்து வம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழிதியூர் ஊராட்சிமன்ற தலைவர் கலையரசி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மெலட்டூர் கால்நடை உதவி இயக்குனர் மணிச்சந்தர், திருக்கருகாவூர் கால்நடை மருத்துவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்நடை மருத்துவர்கள் கனகா தேவி, ரகுநாத், ஷோபன் ராஜ், கால்நடை ஆய்வாளர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் முகாமில் விழிதியூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100 க்கும் மேற்ப ட்ட கால்நடைகள்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றன.

    முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிற குழந்தைகளை கலெக்டர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.
    • விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்ற குழந்தைகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்தினார்.

    இந்த விழாவை அறிவியல் இயக்க மாநில துணை தலைவர் பேராசிரியர் டாக்டர்.சுகுமாரன் தலைமை யேற்று நடத்தினார்.

    முதன்மை கல்வி அலுவலர்சிவக்குமார்மு ன்னிலை வகித்தார்.இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் பள்ளி மாணவிகள் ஆராதனா , அபர்னிகா. பயிற்சி ஆசிரியை பிரியதர்சினி, மற்றும் தலைமை அறங்காவலர் தோழர்.சோமசுந்தரம் தாளாளர் தோழர்.ஜி.பாலசந்திரன், அறங்காவலர் தோழர்.சொக்கலிங்கம், ஆகியோர் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முருகன் செய்திருந்தார்.

    ×