search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி மாரத்தான் போட்டி"

    • முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் பி.கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 6 கி.மீ தூரத்துக்கு மினி மாரத்தான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் 21 வயதிற்குட்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதுகுளத்தூர்- கடலாடி நெடுஞ்சாலையில் நடந்தது. போட்டியை மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 7,100 ரொக்கப் பரிசும், 2-வது இடம் பிடித்தவருக்கு 5,100 ரொக்கப்பரிசும், 3-வது இடம் பிடித்தவருக்கு ரூ.3100 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

    10 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டியில் முதல் பரிசாக ரூ.2,100-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3- பரிசாக ரூ.1,100-ம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் பூவலிங்கம் என்ற மாரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரியபட்டினத்தில் மினி மாரத்தான் போட்டியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசை வென்ற ஆசிப்பிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, 2-ம் பரிசை வென்ற முகம்மது யூசுப்பிற்கு பஞ்சாயத்து துணை தலைவர் புரோஸ் கான், 3-ம் பரிசை வென்ற கைப்பிற்கு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன், பஹது ராஜா ஆகியோர் காசோலை வழங்கினர்.

    ஒன்றிய பற்றாளர் லதா, கவுன்சிலர்கள் மீராசா, அயூப் கான், பீர் முஹைதீன், ரஜப் நிஷா உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர். போட்டி நடைபெற உதவிய அக்பர் அம்பலம், செய்யது இபுராமுசா, ரஜபுல்லாஹ் பெரியபட்டினம் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

    • 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.
    • மாணவ- மாணவிகள் வரும் 7-ந் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் வ.உ.சி. விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்படும். அதன்படி 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் தங்கள் பயிலும் பள்ளியின் ஒப்புதலோடு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வ.உ.சி. விளையாட்டு கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 7-ந் தேதிக்குள் வ.உ.சி. விளையாட்டு கழக இணைச் செயலாளரிடம் மாணவர்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

    • செவரக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செல்வரசன் கோட்டை என்ற செவரக்கோட்டையில் 74-ம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு குரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மது, புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவ மாணவிகள் ஆர்வடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வெற்றி யாளர் களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் குரு இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டி.
    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதா ரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள், ரெட்கிராஸ் சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி, தாலுகா போலீஸ் நிலையம் சென்று மீண்டும் ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறை வடைந்தது.

    பின்னர், இந்த போட்டியில் முதல் பரிசு வென்ற எலத்தகிரி மாணவர் ஜார்ஜ், இரண்டாம் பரிசு பெற்ற பாலக்கோடு மாணவர் பெருமாள், மூன்றாம் பரிசு பெற்ற வி.மாதேப்பட்டி மாணவர் மேகநாதன், பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற உமாவதி, இரண்டாம் பரிசு பெற்ற பிரியா, மூன்றாம் பரிசு பெற்ற டாக்டர்.சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழகளும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. அத்துடன் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • குலசேகரம் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இன்றைய சமுதாயத்தில் போதை பொருட்களுக்கு அடிமை யாகும் மாணவர்கள், இளைஞர்கள் அதன் அழிவை உணர்ந்து அதில் இருந்து விடுபட உறுதிமொழி ஏற்று குலசேகரத்தில் செயல்ப டும் நற்பணி மன்றம் சார்பாக நடத்திய மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் நேபாள நாட்டிற்குச் சென்று சிலம்பு விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்த போட்டியானது திற்பரப்பு பகுதியில் இருந்து 6000 மீட்டர் தூரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை குல சேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் டாக்டர் நெல்சன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டமானது திற்பரப்பு பகுதியில் இருந்து தொடங்கி குலசேகரம் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் 65 வயதான மூதாட்டி பள்ளி மாணவ- மாணவிகளோடு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை மகிழ் வித்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த மூதாட் டியை கவுரவிக்கும் விதமாக ஊக்க தொகையும், கேடயமும் வழங்கப்பட்டது. மூதாட்டி இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மன நலம் குன்றிய மாணவர் ஒருவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அந்தமாணவனை கவுரவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கம் என்றார்
    • மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரம்:

    குளோபல் கேன்சர் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவில் 74 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடை பெற்றது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பிரதீப் டாம் செரி யன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் நிர்மலா ஜெயராஜ், முதல்வர் ஜெசன் ஜார்ஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அய்யம்மாள், தங்கச்சி யம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது. அதன்பின்பு ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரதீப் டாம் செரியன் முன்னிலை வகித்து பேசினார்.

    ×