search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் புகையிலைக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி
    X

    மாரத்தான்போட்டியை டி.எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஒட்டன்சத்திரத்தில் புகையிலைக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி

    • பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கம் என்றார்
    • மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரம்:

    குளோபல் கேன்சர் டிரஸ்ட் சார்பில் சர்வதேச அளவில் 74 இடங்களில் புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடை பெற்றது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பிரதீப் டாம் செரி யன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது.

    எனவே புகையிலை பொருட்களை பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே மாரத்தான் போட்டியின் நோக்கமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் நிர்மலா ஜெயராஜ், முதல்வர் ஜெசன் ஜார்ஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அய்யம்மாள், தங்கச்சி யம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் போட்டி அம்பிளிக்கை கல்லூரியில் இருந்து தொடங்கி தங்கச்சியம்மாபட்டி வரை நடைபெற்றது. அதன்பின்பு ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிரதீப் டாம் செரியன் முன்னிலை வகித்து பேசினார்.

    Next Story
    ×