search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"

    சாமியார் பேச்சை கேட்டு மாற்றுத்திறனாளி மகளை கொன்று தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த பெற்றோர் அடுத்த குழந்தை நன்றாக பிறக்கும் என காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.

    இதனை அடுத்து, சாமியார் ஒருவர் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என ஆனந்தாபாலிடம் கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை கேட்டு, 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் தனது மகளை ஆனந்தாபால், அவரது மனைவி கொன்றுள்ளனர்.

    இதனை அடுத்து, தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி மகளின் சடலத்தை புதைத்துள்ளனர். தற்போது, போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய உள்ளனர். 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக பெண் எம்.எல்.ஏ சென்று வந்த பின்னர் கோவில் கங்கை நதி நீரால் சுத்தப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில்  உள்ள முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி கடந்த ஜூலை 12-ம் தேதி ஒரு விழாவுக்கு சென்று இருந்தார்.

    பெண் எம்.எல்.ஏ போய் வந்த பிரபல ரிஷி த்ரோம் கோவிலில் பெண்கள் வழிபட தடை உள்ளது. இது தெரியாமல் கட்சி  தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்.எல்.ஏ அங்கு சென்று உள்ளார். மகாபாரத காலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

    இந்த கோவிலில் பெண் பக்தர்கள் நுழைவதற்கு பல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

    கோவிலுக்குள் வந்தபோது, மனிஷா அனுராகி மட்டுமே பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் ஒரு புனிதமான தளம் மீது ஏறி நின்றதாக கூறப்படுகிறது. இது ஒரு புனிதமான இடம் மற்றும் மக்கள் மேடையில் குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தொண்டர்களின் நிர்பந்தததால் அங்கிருந்த பூசாரி சுவாமி தயானந்த் மகந்த் ஒன்றும் கூறவில்லை. மனிஷா அனுராகி வந்து சென்றதில் இருந்து சுத்தம் செய்வதற்காக அந்த கோவில் மூடப்பட்டது. கோயிலுக்குள் நுழைந்த மனிஷா அனுராகி குறைந்த சாதியினரே என்று பூசாரி கோபமடைந்தார். 

    மனிஷா அனுராகியின் வருகைக்கு பின் சுவாமி தயானந்த மகந்த், கிராம மக்களும் பஞ்சாயத்து ஒன்றை கூட்டினர். கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் கடவுளின்  கோபத்தை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

    அவரின் விஜயத்தின் பின்னர் ஒரு துளி நீர் மழை பெய்யவில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பஞ்சாயத்து தெய்வங்களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆலயத்தை சுத்தப்படுத்த கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமம் ஆகும் பிரயாக் கொண்டு சென்று சுத்தபடுத்துவது என முடிவுசெய்தனர்.

    அதன்படி கங்கை நீரால் கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்களின் சிலைகள் பிரயாக்கில் சுத்தம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. பக்தர்கள் 'தரிசனம்' செய்வதற்காக இந்த ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று கூறியுள்ள மனிஷா அனுராகி, அங்குள்ள சிலர் மட்டுமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் அவர்கள் அரை வேக்காட்டுத்தனமானவர்கள் என பேட்டியளித்துள்ளார்.
    பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உத்திரப்பிரதேசத்திற்கு நாளை பயணம் செய்ய உள்ளார். #PMModi
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநிலத்தில், 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பழம்பெரும் கவிஞர் கபிர் தாஸின் 500-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்ய உள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அம்மாநிலத்தின் சான்ட் கபிர் நகர் மாவட்டத்தில் உள்ள மகர் பகுதியில் அமைந்துள்ள கவிஞர் கபிர் தாஸின் சமாதியில் மோடி சால்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார். அதைத்தொடர்ந்து ரூ. 24 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள கபிர் அகாடமி ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இந்த ஆராய்சி மையம் கபிர் தாஸின் போதனைகள் மற்றும் தத்துவங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட உள்ளது.

    இறுதியாக, மகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிம்மாண்ட பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கபிர் தாஸ் போன்ற மகான்கள் சாதிமுறைகளை ஒழிக்க போராடியதுடன் நாட்டில் சமூக ஒருமைப்பாடு நிலவ பாடுபட்டதாக கடந்த 24-ம் தேதி நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்சியில் பிரதமர் பேசியது குறிப்பிடத்தக்கது.  #PMModi
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தையை காரில் வந்த பெண் ஒருவர் தெருவில் விட்டுச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #caughtoncamera
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்த பெண் பிறந்த குழந்தையை வெளியே வீசினார். பின்னர் அந்த கார் வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமேராவில் பதிவானது.

    இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #caughtoncamera
    உத்தரப்பிரதேசத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். #UPbypolls #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த காய்ரானா எம்.பி. தொகுதி மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.

    ஏற்கனவே கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதிகளை பா.ஜனதா இழந்த நிலையில் தற்போது தொடர் தோல்வியை தழுவியிருப்பது முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் முதல்-மந்திரி ஆதித்யநாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கோபமாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எகிலாம் பிரகாஷ் முதல்-மந்திரி ஆதித்யநாத்தை கண்டித்து இந்தியில் கவிதை எழுதி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


    அதில், “முதல்வர் இயலாதவர்” என்று மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் கைக்கு அதிகாரம் சென்றுவிட்டது. மோடியின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தோம். ஆனால் மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் நடைபெறவில்லை. சங்பரிவார் போன்ற இயக்கங்கள் உள்ளே நுழைந்து விட்டதால் முதல்-மந்திரி பதவி பயனற்று போனது.

    5 பாராக்கள் கொண்ட இந்த கவிதைக்கு தடம் மாறிச் சென்றது அதிகாரிகள் ஆட்சி என்ற தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

    இதேபோல் பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திரா சிங் கூறுகையில், தேர்தல் தோல்விக்கு ஊழலே காரணம். தாசில்தார் தொடங்கி போலீஸ் நிலையங்கள் வரை ஊழல் பரவி விட்டது. அதிகாரிகளும், போலீசாரும் மக்களை தொல்லைப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டார்கள். முதல்-மந்திரி அதை தடுக்க தவறியதால் அரசு மதிப்பு மரியாதையை இழந்து விட்டது என்றார்.

    இதற்கிடையே ஈடாவா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசுகையில், ஊழல்வாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் பயங்கரவாதிகள். அவர்கள் கூட்டணி வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றார். #UPbypolls #YogiAdityanath
    கைரானா மற்றும் நூர்புர் இடைத்தேர்தலில் தோற்றதற்கு கோடை விடுமுறையில் தொண்டர்கள் டூர் போனதே காரணம் என உத்தரப்பிரதேச பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி விளக்கமளித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

    எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக மந்திரி லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார். “கோடை விடுமுறை என்பதால் தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். இதனால், இடைத்தேர்தலில் தோற்றோம்” என லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
    அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என மாநில அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் வராததால், தான் வசிக்கும் பங்களாவை உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் காலி செய்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு, அரசு சம்பளத்தில் உதவியாளர்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட சகல வசதிகளை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரித்த நீதிபதிகள், “முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க உரிமை கிடையாது. முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில்தான் அவர்கள் இருப்பர். ஓய்வூதியம் உள்ளிட்ட படிகள் வழங்கும் போது, நிரந்தர குடியிருப்பு வழங்குவது தவறானது” என தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இதனை அடுத்து, 15 நாட்களில் முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. மாயாவதி தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு 15 கோடி மதிப்பில் உள்ள வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு அகிலேஷ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மாநில அரசு செவிசாய்க்க மறுத்த நிலையில், இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் விசாரனைக்கு வராத நிலையில் லக்னோவில் தான் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை நேற்று இரவே அகிலேஷ் யாதவ் தொடங்கிவிட்டார். இன்று இரவுக்குள் முழுமையாக அரசு பங்களாவை அவர் காலி செய்து சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AkhileshYadav
    4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. #ByPoll
    புதுடெல்லி:

    உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

    கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு ஆதரவு அளித்தன.

    கைரான தொகுதியில் வென்ற தபசும் ஹசன்

    இந்நிலையில், கைரானா தொகுதியில் தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக உறுப்பினர் மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பந்தாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி முகத்தில் உள்ளார்.

    இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.

    தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.

    மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகிதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.

    மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. #bypoll
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய் கடித்து குதறியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #straydogs
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீதாபூர் மாவட்டத்தில் மட்டும் 14 குழந்தைகள் நாய் கடித்து உயிரிழந்துள்ளனர். மோராபாத் பகுதியில் கடந்த 5 மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தெரு நாயால் தாக்கப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.


    இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோதிநகரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் நேற்று சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். #straydogs
    உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தாங்கள் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

    முன்னாள் முதல்வர் மாயாவதி அரசு பங்களாவை காலி செய்து தனது கட்சிக்கு சொந்தமான பங்களாவுக்கு குடியேற உள்ளார். ஆனால், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கின்றனர்.

    பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு இருவரும் கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  
    உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னர் தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதற்கு இரண்டாண்டுகள் கால அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு, அரசு சம்பளத்தில் உதவியாளர்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட சகல வசதிகளை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு விசாரித்த நீதிபதிகள், “முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க உரிமை கிடையாது. முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில்தான் அவர்கள் இருப்பர். ஓய்வூதியம் உள்ளிட்ட படிகள் வழங்கும் போது, நிரந்தர குடியிருப்பு வழங்குவது தவறானது” என தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    இதனை அடுத்து, 15 நாட்களில் முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. மாயாவதி தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு 15 கோடி மதிப்பில் உள்ள வீட்டில் குடியேற உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது வீட்டை காலி செய்ய 2 ஆண்டுகள் கால அவகாசம் கேட்டுள்ளார்.

    இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் தான் இருப்பதால் தற்போது லக்னோ நகரில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வீடு கிடைப்பது கடினமாக உள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என அகிலேஷ் யாதவ் தரப்பில் மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதிக்காததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPboysuicide
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாமிலி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனை அவரது பெற்றோர் மோட்டார் சைக்கில் ஓட்டக்கூடாது என கண்டித்துள்ளனர். இதனால் சிறுவன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், நேற்று சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் ஓட்ட மறுத்த காரணத்திற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #UPboysuicide

    ×