search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல்"

    • இரவு வழிபாடு முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே திட்டச்சேரி கிராமத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரவு வழிபாடு முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.

    மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பந்தநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்தை வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவிலின் பின்புறம் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல், பந்தநல்லூர் அருகே நெய்குன்னம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை நள்ளிரவு மர்மநபர்கள் திருட முயன்றுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் கோவிலின் அருகில் சென்றதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. தொடர் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.
    • உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
    • பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.

    இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.

    ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.

    பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.

    இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.

    வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.

    உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.

    சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

    சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.

    மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.

    மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.

    திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.

    இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.

    துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.

    திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.

    பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.

    அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.

    குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

    நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

    நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

    • சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்
    • 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும்.

    இம்மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, தேக்கம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கோவல் கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, அறநிலையத்துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் சித்ரா, மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்கா வலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, தங்க மணி, மருதமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 24 ஆயிரத்து 881 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில் 25 லட்சத்து 15 ஆயிரத்து 485 ரூபாயும் இருந்தது. மேலும் 442 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    • பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன
    • 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில் குமரி மாவட்டத் தில் உள்ள திருக்கோவில் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மா ணணவிகள், மேல்மரு வத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடைபெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    இதில் உண்டியல் மூலம் ரூ.20 லட்சத்து 49 ஆயித்து 958 வசூலாகி உள்ளது. இதுதவிர 13 கிராம் 300 மில்லி தங்கமும் 81 கிராம் வெள்ளியும் மற்றும் அமெரிக்க டாலர், மலேசியா ரிங்கிட், ஆஸ்திரேலியா டாலர், அரபு எமிரேட்ஸ் திர்காம்ஸ் போன்ற வெளிநாட்டு பணமும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.

    • 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.
    • உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த 2 மாதங்களாக திறந்து எண்ணப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 17 நிரந்தர உண்டியல்களும் இன்று காலை திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன், பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப் பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில்பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்டனர்.

    • காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது
    • 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அவர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவ தற்காக வேண்டி கோவில் உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர் ரெட்டி, கோவில் பக்தர்கள் சங்க நிர்வாகி ஜெயராம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்த சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 494 வசூல் ஆகி இருந்தது.

    • கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
    • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் ரூ 3 முதல் 5 கோடி வரை வசூல் ஆகிறது. உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் இருந்து உண்டியல்கள் சிறிய வாகனங்கள் மூலம் கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள கிரேன்கள் மூலம் உண்டியல்கள் லாரிகளில் ஏற்றி காணிக்கை எண்ணிக்கை நடைபெரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    காணிக்கை உண்டியல்கள் இந்த லாரியில் பாதுகாப்பான முறையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப் பட்டிருந்தது.

    இதுகுறித்து கோவில் தலைவர் ஸ்ரீதர் சிதம்பர நாதன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் உண்டி யலை உடைத்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சி.சி.டி.வி. காமிரா வில் பதிவாகி இருந்தது ஆலங் கோட்டை யை சேர்ந்த மகேஷ் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மகேஷை தேடி வந்தனர். போலீசார் தேடுவது அறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த மகேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பறக்கை அருகே புல்லுவிளை முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து தங்க நகைகள், வெண்கல குத்துவிளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஈத்தாமொழி தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த அரவிந்த் பிரியன் (21) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப் பட்டவ ரிடம் இருந்து 4 குத்து விளக்குகள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியன் மீது ராஜாக்கமங்கலம், வெள்ளிச் சந்தை பகுதி களில் கோவில் களில் கொள்ளை சம்பவங்க ளில் ஈடுபட்ட வழக்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
    • கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரத்தில் ஸ்ரீகன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜை முடிந்து பூஜாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று கோவிலுக்கு வந்தபோது கோவில் கருவறையில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து பாப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
    • 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

    அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு பைபாஸ் ரோட்டில் கடந்த புதிதாக சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இக்கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஒரத்தநாடு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×