search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டோ"

    • ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள என்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பொன்னம்மாள்(வயது72). இவர் நேற்று தாதன்குளம் சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    தாதன்குளத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பொன்னம்மாள் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் அவர் சீட்டின் ஓரத்தில் அமர்ந்ததாக தெரிகிறது.

    ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது பொன்னம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.

    இதனால் விபத்துக்கள் நிகழ்ந்து உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    • சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும்.
    • வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

    சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற ஆட்டோவின் பின்னால் கூலர் பொருத்தப்பட்டிருப்பதை காணமுடிகிறது. இதைப்பார்த்து சாலையில் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். டிரைவர் தானும் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக கூலர் பொருத்திய செயலை வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

    • வினோத் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் காசிதர்மத்தில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து

    மேட்டுப்பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் சாலையில் தவறி விழுந்தார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. இதில் வினோத் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
    • ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்துவிட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார் அவரை உடன் சென்றவர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகு சேர்த்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியின் கையை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை காண்பதற்காக இசக்கிராஜா, அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மங்காபுரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவர் பாண்டியம்மாள் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனை இசக்கிராஜா தட்டிக் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பைப்பை எடுத்து இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி இசக்கிராஜா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.

    • கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
    • அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் தற்போது ரேபிடோ பைக் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

    இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

    சமீபத்தில் ரேபிடோ வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியது. பெண் பயணிகளை மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இவர்கள் அழைத்து செல்கின்றனர். ரேபிடோ பைக் வசதி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மொபைல் செயலிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் இணைக்கப்பட்டு சவாரி ஏற்றப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது.

    பயணிகளுக்கு பாதுகாப்பற்றது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொண்டு பெண்களை பயன்படுத்தி வருவது தவறான முன் உதாரணமாகும். ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

    இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் நாளை தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில் 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோ.
    • வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.19,65,000-ம் இதற்கு மானிய தொகையாக ரூ5,20,500 ஆகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெகடர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தாட்கோ மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி ஊராட்சி சாக்கரமஸ் என்பருக்கு தொழில் முனைவோர் இயக்கத்தின் மூலம் ரூ.2.95,000 மொத்த தொகையில் ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவையும்,

    மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் ஊராட்சி பெரிய தெரு ராஜபாண்டியன் என்பருக்கு ரூ.9,800,000 மொத்த தொகையில் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கோதண்டபுரம் ஊராட்சியை சார்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.6,00,000 மொத்த தொகையில் ரூ.2.07,000 மானியத்துடன் புதிய டிராக்டர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    இவ்வாகனங்களின் மொத்த மதிப்பு மதிப்பு ரூ.19, 65,000 மும் இதற்கு மானிய தொகையாக ரூ5, 20, 500 ஆகும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

    முத்துசாமி, மானட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியயின் நேர்முக உதனியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட தாட்கோ மேலாளர்சுகந்தி பரிமளம்உதவி மேலாளாசுசிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
    • காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    வாடிப்பட்டி

    கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.

    மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.

    அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.

    அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

    இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    • ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.

    திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    • நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இரும்பு தடுப்பில் மோதியதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • படுகாயம் அடைந்த 3 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வல்லம்:

    தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் அருகே பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவில் 3 பெண்கள் இருந்துள்ளனர்.

    அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் ஆட்டோ வின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்து ஆட்டோ டிரைவர் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமங்கலம் அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
    திருமங்கலம் 

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் படித்துரை(44). இவருடைய மனைவி தேடா செல்வி. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    படித்துரை அனுப்பபட்டியில் டிங்கரிங் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு டிங்கரிங் பணிக்கு வந்த ஆட்டோவை எடுத்து கொண்டு செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் சென்றார்.

    அனுப்பப்பட்டி அருகே வரும்போது பிரேக் பிடிக்காததால் சாலையோர புளியமரத்தில் ஆட்டோ மோதியது.

    இதில் படுகாயமடைந்த படித்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ராஜபாளையம்


    ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். 

    இந்த நிலையில் அவரது சமுதாய கூட்டம் நடைபெற்றது. அதில் துைண நாட்டாமையாக ராமசாமி என்பவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். இதற்கு கருப்பையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமசாமியை துணை நாட்டாமையாக தேர்ந்தெடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த பிரச்சனை தொடர்பாக ராமசாமி, கருப்பையா மீது கடும் கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் கருப்பையா நேற்று மதியம் தனது வீட்டு முன்பு ஆட்டோவை நிறுத்தி  விட்டு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த ராமசாமி, அவரது மருமகன் அய்யனார் மற்றும் ஆறுமுகம், மூர்த்தி, பாரதி ஆகியோர் கருப்பையா ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளனர். 

    இதில் ஆட்டோ எரிவதை அறிந்த  கருப்பையா வெளியில் வந்து ஆட்டோவுக்கு தீ வைத்த நபர்களை கண்டித்தார். அவர்கள் அங்கு நிற்காமல் தப்பி சென்று விட்டனர். இதுபற்றி கருப்பையா தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார்.  சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா   ராமசாமி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×