என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி
- மனைவியின் கையை பிடித்து இழுத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மங்காபுரத்தை சேர்ந்தவர் இசக்கிராஜா(வயது26), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பானுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பானுபிரியா, குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இசக்கிராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள்(20) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் புதுப்பாளையம் மாரி யம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதனை காண்பதற்காக இசக்கிராஜா, அவரது மனைவி பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மங்காபுரம் தண்ணீர் தொட்டி அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி(25) என்பவர் பாண்டியம்மாள் கையை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனை இசக்கிராஜா தட்டிக் கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி பைப்பை எடுத்து இசக்கிராஜாவை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி இசக்கிராஜா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்.






