என் மலர்
நீங்கள் தேடியது "இரும்பு தடுப்பு"
- 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது.
- பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணியர் நிழற்குடை இருந்து வந்ததை சாலை விரிவாக்க பணியின் போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி குப்பையில் வீசினர். இதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதால் கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி முடிந்து தற்போது இருபுறமும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைத்து, நேற்று இரவு அதன் மேல் சிமெண்ட் கட்டை அமைப்பதற்கு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் திரண்டு இந்த இடத்தில் இரும்பு கம்பி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது இரும்பு கம்பி வைத்ததோடு இல்லாமல் நிரந்தரமாக அகற்றாமல் இருக்க சிமெண்ட் கட்டைகள் அமைக்க யார் அனுமதி அளித்தார்கள்? என கேட்டனர். பின்னர் இன்று காலை இரும்பு கம்பியை முழுமையாக அகற்ற வேண்டும் என கூறினார்.
அப்போது ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து, பயணியர் நிழற்குடை அமைக்கும் இடத்தில் எப்படி இரும்பு கம்பி அமைத்தார்கள் என கேட்டு காண்டிரக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் இங்கு உள்ள இரும்பு கம்பியை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவோடு இரவாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியை அகற்றினார்கள். மேலும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் மீண்டும் இரும்பு கம்பி வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். இது மட்டும் இன்றி புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எங்களிடம் பேசி நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இரும்பு தடுப்பில் மோதியதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- படுகாயம் அடைந்த 3 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வல்லம்:
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் அருகே பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவில் 3 பெண்கள் இருந்துள்ளனர்.
அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் ஆட்டோ வின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்து ஆட்டோ டிரைவர் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






