என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iron block"

    • நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இரும்பு தடுப்பில் மோதியதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • படுகாயம் அடைந்த 3 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வல்லம்:

    தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் அருகே பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவில் 3 பெண்கள் இருந்துள்ளனர்.

    அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் ஆட்டோ வின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்து ஆட்டோ டிரைவர் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×