ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலி

ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள். திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
சேதமடைந்த ஆட்ேடா கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டதை படத்தில் காணலாம்.
சேதமடைந்த ஆட்ேடா கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

திருமங்கலம்

மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.

திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com